திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

புது அவதாரம் எடுத்து அதிர்ச்சி கொடுத்த விஜய் சேதுபதி.. தனுஷ், சிவகார்த்திகேயன் போல செய்யபோகும் வேலை

சினிமாவை பொறுத்தவரை ஒவ்வொரு வேலைக்கென்று ஒவ்வொரு துறை இருக்கும். நடிகர்கள், இசை கலைஞர்கள், படத்தொகுப்பு, ஸ்டண்ட் யூனியன், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்ஸ், லைட் மேன்ஸ், கேமரா மேன்ஸ் என பல டெக்னீஷியன்கள் சேர்ந்து உருவாக்குவது தான் ஒரு திரைப்படம். இந்த துறைகளில் நிறைய கலைஞர்கள் சிறந்து விளங்குகின்றனர்.

இந்த துறைகளில் எல்லாம் கொஞ்சம் ட்ரெண்ட் மாறி, யாருக்கு என்ன வேலை பிடிக்கிறதோ அதை முயற்சி செய்து வெற்றியும் பெறுகிறார்கள். இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் படத்தில் நடிப்பது, காமெடியன்கள் ஹீரோக்கள் ஆவது, வில்லன்கள் ஹீரோக்கள் ஆவது, ஹீரோக்கள் பாடுவது, பாடல் எழுதுவது, படம் இயக்குவது என பன்முகத் திறமை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

Also Read: ராசியில்லாத விஜய் சேதுபதி படம்.. சூப்பர் ஹிட் படத்தை வாட்டி வதைக்கும் முன்னணி பிரபலங்கள்

உதாரணத்திற்கு இப்போதிருக்கும் டாப் ஹீரோக்களான தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் பாடலாசிரியர்களாக கலக்கி வருகிறார்கள். தனுஷ் முதன் முதலில் மயக்கம் என்ன படத்திற்கு பாடல்கள் எழுத ஆரம்பித்து இதுவரை ஐம்பதிற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கிறார். சமீபத்தில் இவர் பீஸ்ட் படத்திற்காக எழுதிய ‘அரபிக் குத்து’ பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

இப்படி தனுஷும், சிவகார்த்திகேயனும் பாடலாசிரியர்கள் வேலையை பார்த்து வர, இப்போது இவர்கள் இருவருக்கும் போட்டியாக நடிகர் விஜய் சேதுபதி களத்தில் இறங்கியிருக்கிறார். விஜய் சேதுபதி தன்னுடைய அடுத்த படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். இதற்காக இவர் இசை பயின்று வருகிறாராம். ஒருவேளை சமீபத்தில் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்து இருக்கும் மிஸ்கின் கூட இவருக்கு ரோல் மாடலாக இருக்கலாம்.

Also Read: சூப்பர் ஸ்டாருடன் இணையும் விஜய் சேதுபதி.. வேற லெவல் காம்போவில் உருவாகும் படம்

விஜய் சேதுபதிக்கு அடுத்தடுத்து மைக்கேல், மும்பைக்கார், மேரி கிருஸ்துமஸ், ஜவான், விடுதலை போன்ற படங்களின் வேலைகள் படுபிசியாக இருந்தாலும் தனக்கு பிடித்த இசைக்கு தனியாக நேரம் ஒதுக்கி பயின்று வருகிறாராம். இவர் கர்நாடக இசை கலைஞர் நிவாஸ் கே பிரசன்னா என்பவரிடம் முறையாக இசை பயின்று கொண்டிருக்கிறார்.

நிவாஸ் கே பிரசன்னா விஜய்சேதுபதியின் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு ரிலீசான சேதுபதி படத்திற்கு இசையமைத்தவர். மேலும் இவர் 2014ஆம் ஆண்டு அசோக் செல்வன், ஜனனி நடிப்பில் வெளியான தெகிடி படத்தின் மூலம் அறிமுகமானவர். கூடிய விரைவில் விஜய்சேதுபதியிடம் இருந்து ஒரு சர்ப்ரைஸ் செய்தி வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

Also Read: இந்த வருஷம் வேண்டாம், அடுத்த வருஷம் பார்த்துக்கலாம்.. விஜய் சேதுபதியின் பாலிவுட் கனவை சுக்குநூறாக்கய நடிகர்

Trending News