Maharaja: நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 50வது படமாக வெளிவந்த மகாராஜா நல்ல வரவேற்பை பெற்றது. அப்பா மகள் பாசத்தை மையப்படுத்தி இருந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.
இதனால் தியேட்டரில் கூட்டம் அலைமோதிய நிலையில் வசூலும் குவிந்தது. அதே போல் ஓடிடி தளத்தில் வெளியாகி நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தது.
அதைத்தொடர்ந்து கடந்த வாரம் மகாராஜா சைனாவில் டப் செய்யப்பட்டு வெளியானது. மேலும் முதல் நாளிலேயே படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து வசூலும் ஏறுமுகமாக இருந்த நிலையில் படம் வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்டது. இந்த ஒரு வாரத்தில் மகாராஜா 40 கோடி வரை வசூலித்திருக்கிறது.
சைனாவை கலக்கும் விஜய் சேதுபதி
இது தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப் பெரும் பெருமையாகும். அதே போல் சைனாவில் இத்தனை கோடி வசூலித்த முதல் தமிழ் படமும் இதுதான்.
மேலும் சைனா பாக்ஸ் ஆபிஸில் மகாராஜா தற்போது மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் பட குழு தற்போது பேரின்பத்தில் இருக்கின்றனர்.
விஜய் சேதுபதிக்கும் இது மிகப்பெரும் பெருமையாக இருக்கிறது. ஏற்கனவே இந்திய அளவில் 110 கோடிகளை படம் வசூலித்திருந்தது.
அதை அடுத்து இந்த வசூலும் சேர்ந்துள்ள நிலையில் தற்போது 150 கோடி லாபம் கிடைத்துள்ளது. அதேபோல் சைனாவில் இந்த வசூல் இன்னும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.