வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

லஞ்சம் கொடுத்தாலும் தப்பில்லை.. வேட்டியை வரிஞ்சு கட்டி ப்ரோமோ வெளியிட்ட விஜய் சேதுபதி.

சினிமாவில் நடிகர்கள் பலரும் சமீபகாலமாக படங்களை தாண்டி வெப் சீரியல்களிலும், நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். அதற்குக் காரணம் நடிகர்கள் நடிக்கும் படங்கள் பெரிய அளவில் திரையரங்குகளில் வெளியிட முடியாமல் தவித்து வருவதால் தான்.

ஒருபக்கம் படங்கள் திரையரங்கில் வெளியிடப்படாததால் அடுத்தடுத்து படங்களில் நடிக்க முடியாமல் பல நடிகர்களும் தவித்து வருகின்றனர். அதனால் ஒரு சில புத்திசாலியான நடிகர்கள் அப்படியே ரூட்டை மாற்றிக்கொண்டு வெப்சீரிஸ்களிலும், நிகழ்ச்சிகளிலும் தொகுத்து வழங்கி வருகின்றன.

தமிழ் தெலுங்கில் ஒரே நேரத்தில் சின்னத்திரைகளை நிறைக்க வரும் நிகழ்ச்சி “மாஸ்டர் செஃப்”. தமிழில் மக்கள் செல்வன் “விஜய் சேதுபதியும்” தெலுங்கில் நடிகை “தமன்னா” என நட்சத்திரங்களை தொகுப்பாளர்களாக களமிறக்கியுள்ளது டிவி சேனல்கள்.

தமிழில் சன் டி.வியும் தெலுங்கில் ஜெமினி டி.வியும் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது. இவ்வாறு சின்னத்திரை ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அள்ளிச்சென்ற நிகழ்ச்சி இப்போது “ப்ரோமோ”வெளியிட்டுள்ளது.

வெற்றியாளருக்கு மிகப்பெரிய தொகையும் பரிசாக நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி இப்போதே தயாரிப்பு விளம்பர நிறுவனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இத்தனை எதிர்பார்ப்புகளோடு இருக்கும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு தேதி மாதம் விரைவில் உறுதிப்படுத்த உள்ளது.

இதற்கான “ப்ரோமோ” மக்கள் செல்வன் விஜய் சேதுபதி திரையில் வந்து திருப்திப்படுத்தியுள்ளார். வி.ஜே.எஸ் ப்ரோமோவில் வந்த பிறகு நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியே உள்ளது.

Trending News