விஜய் சேதுபதி நடிப்பில் சமீபகாலமாக வெளியான படங்கள் எதுவுமே சொல்லுமளவிற்கு இல்லை அதனால் தற்போது விஜய் சேதுபதி கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிப்பதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் தனது வெற்றியை பதிவு செய்தவர் பொன்ராம் அதன்பிறகு தொடர்ந்து சிவகார்த்திகேயன் வைத்து ரஜினி முருகன் மற்றும் சீம ராஜா ஆகிய படங்களில் கைகோர்த்தார் இருப்பினும் கடைசியாக வெளியான சீமராஜா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.
அதனால் தற்போது விஜய் சேதுபதியை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை பிரமாண்டமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் விஜய் சேதுபதி மற்றும் பொன்ராம் இருவரும் இணைவது மட்டுமே உறுதி செய்திருந்தனர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் ஜோடியாக நடிக்கவுள்ள அனுகீர்த்தி வாஸ் என்ற நடிகையின் பிறந்தநாள் அன்று புகைப்படத்தை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும், காமெடி கலந்த கதாபாத்திரமாக இருக்கும் எனவும் கூறியுள்ளனர். தற்போது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.