வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஸ்டாண்ட் அப் காமெடியனுடன் கிசுகிசுக்கப்படும் ஏஜென்ட் அமரின் காதலி.. அப்ப விஜய் சேதுபதி லிஸ்ட்ல இல்லையா?

Actor Vijay Sethupathy: விஜய் சேதுபதி தனது கடின உழைப்பின் காரணமாக சினிமாவில் முக்கிய நடிகர்கள் ஒருவராக இருக்கிறார். ஆனாலும் அவரது சினிமா வாழ்க்கையில் சில நடிகைகளுக்கு தொடர்ந்து அவர் வாய்ப்பு கொடுத்து வருவதால் கிசுகிசுவிலும் சிக்கி இருக்கிறார். அவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் நிறைய படங்கள் நடித்து இருக்கிறார்.

அதற்கு அடுத்தபடியாக மடோனா செபஸ்டினுக்கும் வாய்ப்பு கொடுத்தது விஜய் சேதுபதி தான் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் மற்றொரு நடிகை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் நிறைய படங்கள் நடித்து இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் இவர்களை இணைத்து கிசுகிசுக்கள் வெளியான நிலையில் கோபத்தில் மீடியாவுக்கு பேட்டி கொடுத்திருந்தார்.

Also Read : விஜய்யா, விஜய் சேதுபதியா உண்மையை உளறிய ஜவான் ஸ்டண்ட் மேன்.. அட்லீயின் கோபத்தை சம்பாதித்த பைட்டர்

இப்போது அவரை ஸ்டாண்ட் அப் காமெடியன் ஒருவருடன் இணைத்து செய்தி காட்டுத்தைப் போல் பரவி வருகிறது. அதாவது விக்ரம் படத்தில் ஏஜென்ட் அமரின் காதலியாக நடித்திருந்தவர் தான் நடிகை காயத்ரி . இவர் ரம்மி, சூப்பர் டீலக்ஸ், புரியாத புதிர், மாமனிதன், துக்ளக் தர்பார் போன்ற படங்களில் விஜய் சேதுபதியுடன் நடித்திருக்கிறார்.

விஜய் சேதுபதி தொடர்ந்து ஒரு காரணமாகத்தான் இவருக்கு பட வாய்ப்பு தருகிறார் என்று கூறப்பட்ட நிலையில் இப்போது ஸ்டாண்ட் அப் காமெடியன் அரவிந்த் சா என்பவரை காதலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தனியார் தொலைக்காட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சியில் பங்குபெறும் இவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

Also Read : விடுதலை 2-ல் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் மலையாளத்து பைங்கிளி.. ரவுண்டு கட்ட போகும் வெற்றிமாறன்

இந்நிலையில் காயத்ரி இவரை காதலிப்பது ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சியாக இருக்கிறது. ஆனாலும் இதுகுறித்து உறுதி பட தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஏனென்றால் இந்த செய்திக்கு அரவிந்த் சா மற்றும் காயத்ரி இருவருமே எந்த ஒரு பதிவும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறார்கள்.

இதனால் இந்த செய்தி முற்றிலும் வதந்தியே என்று கூறப்படுகிறது. மேலும் இப்போது காயத்ரி தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் பிசியாக இருந்து வருகிறார். அவரின் மார்க்கெட்டை சரியா வைக்க வேண்டும் என சிலர் இவ்வாறு சூழ்ச்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

gayathri
gayathri

Also Read : ஆசை ஆசையாய் வாங்கிய காரை நண்பனுக்கு தாரவார்த்து கொடுத்த விஜய் சேதுபதி.. ஏமாற்றிய துரோகிக்கு வந்த கிப்ட்

Trending News