புதன்கிழமை, ஜனவரி 22, 2025

இறுதிக்கட்டத்தில் விஜய் சேதுபதி படத்தின் இரண்டாம் பாகம்.. எப்போ ரிலீஸ் தெரியுமா..?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்துவரும் புதிய படம் காத்துவாக்குல ரெண்டு காதல். போடா போடி, நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், பாவக்கதைகள் ஆகிய படங்களுக்குப் பின் விக்னேஷ் சிவன் இயக்கும் படம் இதுவாகும்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி. இவர் தற்போது கோலிவுட் படங்கள் மட்டுமில்லாமல் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழ் மட்டுமல்லாது, தெலுங்குப்படத்திலும் இவர் வில்லனாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாரா & சமந்தா இருவருடனும் ஜோடியாக நடித்து வருகிறார், விஜய்சேதுபதி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதன் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னரே தொடங்கினாலும், கொரோனா காரணமாக படப்பிடிப்பு தடைபட்டது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்துவருவதாக கூறப்படுகிறது.

kathu vakkula rendu kathal
kathu vakkula rendu kathal

அங்கு 10 நாட்கள் தங்கியிருந்து இறுதிக்கட்ட காட்சியை படமாக்கும் விக்னேஷ் சிவன், அதன் பின் படத்திற்கான பின்னணி பணிகளை தொடங்கவுள்ளாராம். மேலும் அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து இவ்வருட இறுதிக்குள் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்.

Trending News