வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

டி ராஜேந்தருக்கு போட்டியாக களம் இறங்கும் சர்ச்சை மன்னன்.. விஜய் சேதுபதியை டீலில் விடும் ஆல்ரவுண்டர்

Vijay Sethupathi : டி ராஜேந்தர் பன்முகத் திறமை கொண்டவர். பொதுவாக சினிமாவில் ஒரு துறையில் சாதிப்பதே மிகப்பெரிய விஷயம். ஆனால் இயக்குனர், நடிகர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என எல்லாத் துறைகளிலுமே கை தேர்ந்தவர்.

அவருக்கு அடுத்தபடியாக சினிமாவில் டிஆரின் சாயலில் யாரையும் பார்க்க முடியவில்லை. இப்போது அவருக்கு போட்டியாக இயக்குனர் ஒருவர் களமிறங்க இருக்கிறார். அதுவும் மேடைப்பேச்சுயில் சர்ச்சை மன்னராக வலம் வரும் அந்த பிரபலம் யார் என்பதை இப்போது பார்க்கலாம்.

சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். இவர் இயக்குனர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், எழுத்தாளர், பாடகர் என டி ஆர் போலவே பல திறமைகளை வைத்துள்ளார். இப்போது ஒரு படத்திற்கு இசையமைப்பாளராகவும் களம் இறங்கி இருக்கிறார்.

மிஷ்கின், விஜய் சேதுபதி கூட்டணியில் ட்ரெயின்

இந்நிலையில் விஜய் சேதுபதி மற்றும் மிஷ்கின் இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர். இவர்கள் இருவரின் கூட்டணியில் ட்ரெயின் படம் உருவாக இருந்தது. ஆனால் இப்போது மிஷ்கின் பிஸியாக இருக்கிறார்.

பொதுவாகவே பட விழாக்களில் மிஷ்கின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவார். அந்த விழாக்களில் ஏதாவது சர்ச்சையான விஷயங்களை பேசி பரபரப்பை ஏற்படுத்தி விடுவார். இப்போது இசையமைப்பாளர் அவதாரம் எடுத்துள்ளதால் அதற்கான பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.

அதோடு விஜய் சேதுபதியும் இப்போது பல படங்களில் பிசியாக இருக்கிறார். எனவே இப்போதைக்கு ட்ரெயின் படத்தின் படப்பிடிப்பு நடப்பது கடினம் தான். மேலும் மிஷ்கின் பிசாசு 2 படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த நிலையில் அந்த படமே தற்போது வரை ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது.

Trending News