ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

தென்மேற்கு பருவக்காற்று படத்தை மிஸ் செய்த ஷங்கர் பட நடிகர்.. இல்லனா இன்றைய விஜய்சேதுபதி அவர்தான்

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராக வலம் வரும் சீனு ராமசாமி கிராம மக்களின் யதார்த்தமான வாழ்க்கை சூழலை படமாக்குவதில் கைதேர்ந்தவர். அந்த வகையில் இவரது இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் தென்மேற்கு பருவக்காற்று. இப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமானவர் தான் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வரும் விஜய் சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது.

கிராம மக்களின் வாழ்க்கையை கண்முன் நிறுத்தும் அளவிற்கு படம் மிகவும் எதார்த்தமாக உருவாக்கப்பட்டிருந்தது. அதிலும் இப்படத்தில் விஜய் சேதுபதி, சரண்யா பொன்வண்ணன் மற்றும் வசுந்தரா ஆகியோரின் நடிப்பு மிகவும் எதார்த்தமாக அமைந்திருந்தது படத்திற்கு மேலும் பலம் சேர்த்தது. மேலும் இப்படம் தேசிய விருதை வென்றது.

இப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்திருந்தார். படத்தில் சரண்யா, அருள்தாஸ், காதல் சுகுமார், போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தற்போது இப்படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது இப்படத்தில் விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் குமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த மணிகண்டன் தான் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் முதலில் நடிக்க இருந்தாராம்.

Actor Manikandan

சில காரணங்களால் அவரால் படத்தில் நடிக்க முடியாமல் போக அடுத்ததாக விஜய் சேதுபதிக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததும் அவர் நடித்துள்ளார். விஜய் சேதுபதி தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகவும் திறமையாக பயன்படுத்தி உள்ளார் என்பதற்கு இப்படம் சிறந்த உதாரணமாகும்.

ஒருவேளை இப்படத்தில் மணிகண்டன் நடித்திருந்தால் அவரும் முன்னணி நடிகராக வலம் வந்திருப்பாரோ என்னவோ? இதேபோல் பரத் நடிப்பில் வெளியான காதல் படத்திலும் மணிகண்டன் தான் நடிக்க இருந்ததாம். ஆனால் இவரே அப்படத்தை வேண்டாம் என நிராகரித்துள்ளார்.

Trending News