தற்போது தியேட்டர்கள் கொஞ்சம் கொஞ்சமாக திறக்கப்பட்டதால் OTTக்கு போகலாம் என்றிருந்த சில படங்கள் மீண்டும் தியேட்டர் பக்கம் திரும்பியது தியேட்டர்காரர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இருந்தாலும் ஏதாவது ஒரு முன்னணி நடிகர் படம் கிடைத்தால் சரியாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கின்றனர்.
தமிழ் சினிமாவில் கைவசம் ஏகப்பட்ட படங்கள் வைத்து நடித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி. சொல்லப்போனால் விஜய் சேதுபதி நடிப்பில் மட்டும் கிட்டதட்ட பத்து படங்களுக்கு மேல் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன.
அதில் சில படங்கள் ஏற்கனவே நெட்ப்ளிக்ஸ் அமேசான் போன்ற ஓடிடி தளங்களுக்கு கொடுத்துவிட்டதால் தியேட்டருக்கு கொண்டு வரமுடியாத நிலைமை. இல்லையென்றால் அந்தப் படங்களும் தியேட்டரில்தான் வெளியாகியிருக்கும்.
இருந்தாலும் சொந்த தயாரிப்பில் தயாரித்திருக்கும் லாபம் என்ற படத்தை தியேட்டருக்கு கொண்டு வந்துள்ளார் விஜய் சேதுபதி. அதனைத் தொடர்ந்து காக்கா முட்டை என்ற பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்த மணிகண்டன் இயக்கத்தில் நடித்த கடைசி விவசாயி படமும் தியேட்டரில் வெளியாக உள்ளதாம்.
கடைசி விவசாயி படத்தின் டிரைலர் வெளியான போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரட்டிப்பான நிலையில் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக படம் நீண்ட நாட்களாக வெளியாகாமல் தடுமாறி வந்தது. இதற்கிடையில் பிரபல ஓடிடி நிறுவனம் ஒன்றுக்கு பெரியவிலைக்கு கொடுத்துவிட்டார்களாம்.
ஆனால் தற்போது மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட்டதால் பெரிய விலைக்கு கொடுத்த படத்தை திரும்ப வாங்கி வந்து தியேட்டர்களில் வெளியிட முடிவு எடுத்துள்ளாராம் விஜய் சேதுபதி. மனுசனுக்கு ரிஸ்க் எடுக்கறது எல்லாம் ரஸ்க் சாப்பிடற மாதிரி ஆயிடுச்சு போல.