வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

தேசிய விருது இயக்குனருடன் ஒப்பந்தமான விஜய் சேதுபதி.. எதிர்பார்ப்பை கிளப்பிய லேட்டஸ்ட் அப்டேட்

எந்த ஒரு பின்புலமும் இல்லாமல், யாருடைய ஆதரவும் இல்லாமல் தனது சொந்த முயற்சியால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பையன் போன்ற தோற்றமும், இவரது எதார்த்தமான நடிப்புமே விஜய் சேதுபதியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகும்.

இதுவரை தமிழ் சினிமாவில் மட்டும் முன்னணி நடிகராக வலம் வந்த விஜய் சேதுபதி தற்போது இதர மொழிகளிலும் அவரது கவனத்தை திசை திருப்பி உள்ளார். அந்த வரிசையில் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற பிற மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். தற்போது தமிழ் சினிமாவில் கைவசம் அதிக படங்களை வைத்திருக்கும் ஒரே நடிகர் இவர் மட்டுமே.

அந்த வகையில் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் லாபம் மற்றும் துக்ளக் தர்பார் ஆகிய படங்கள் வெளியாகி உள்ளன. இதுதவிர கைவசம் அனபெல் சேதுபதி, கடைசி விவசாயி, மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர், விடுதலை, காந்தி டாக்ஸ், விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன. இவை அனைத்தும் தமிழ் படங்கள் மட்டும் தான். இதுதவிர தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

kakka-muttai-boy-cinemapettai
kakka-muttai-boy-cinemapettai

இதோடு நிற்காமல் மேலும் பல புதிய படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகி தேசிய விருது வென்ற காக்கா முட்டை பட இயக்குனர் மணிகண்டனுடன் நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் சேதுபதி ஏற்கனவே ஆண்டவன் கட்டளை மற்றும் கடைசி விவசாயி ஆகிய படங்களில் இயக்குனர் மணிகண்டனுடன் இணைந்து பணியாற்றி உள்ள நிலையில், தற்போது மூன்றாவது முறையாக அவருடன் கூட்டணி அமைக்க உள்ளார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததால், தற்போது உருவாக உள்ள இந்த புதிய படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Trending News