திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஒளிச்சு வச்ச மகளை திடீரென அறிமுகப்படுத்தும் விஜய் சேதுபதி.. ஓணம் பண்டிகை வைரல் புகைப்படம்

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருபவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. குடும்ப கஷ்டத்திற்காக துபாயில் சாதாரண வேலை பார்த்து வந்த விஜய் சேதுபதி, தமிழ் சினிமாவில் சின்ன, சின்ன கதாபாத்திரங்களில் ஆரம்பத்தில் ஏற்று நடித்து வந்த்தார். தொடர்ந்து இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி பல படங்களில் நடித்து வந்தார்.

என்னதான் இவர் ஹீரோவாக நடித்தாலும், இவருக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்த படம் தான் விக்ரம் வேதா. நடிகர் மாதவனுடன் இணைந்து வேதா கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி, தொடர்ந்து நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றார். அந்த வகையில், இவர் விஜய்யுடன் நடித்த மாஸ்டர், கமலஹாசனுடன் நடித்த விக்ரம் உள்ளிட்ட படங்கள் இவரை இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது.

Also Read: லோகேஷ் செதுக்கிய 5 கதாபாத்திரங்கள்.. மாஸ் காட்டிய விஜய் சேதுபதியின் ரெண்டு கேரக்டர

மேலும் தற்போது நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியாக உள்ள ஜவான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்த படம் மட்டுமில்லாமல், நடிகை கத்ரினா கைப் நடிப்பில் ஹிந்தியில் உருவாகியுள்ள மேரி கிறிஸ்துமஸ் படத்திலும் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படி நடிகர் விஜய் சேதுபதி கையில் தற்போது வரை 20க்கும் மேற்பட்ட படங்கள் வரிசைக் கட்டி நிற்கிறது.

அந்த வகையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடிகர் விஜய் சேதுபதி அவரின் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அவரது மனைவி, மகன், மகள் உள்ளிட்டோருடன் விஜய் சேதுபதி இருக்கும் அந்த புகைப்படத்தில், அவரது மகளை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர்.

Also Read: வில்லனுக்கு விஜய் சேதுபதி கொடுத்த வாக்குறுதி.. 17 வருடங்களுக்குப் பின் ஜெயிலரால் கிடைத்த அங்கீகாரம்

கடந்த 2019 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சிந்துபாத் படத்தில் அவருடன் இணைந்து அவரது மகன் சூர்யா சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் படிப்பில் கவனம் செலுத்தி வரும் சூர்யா, கூடிய விரைவில் படங்களில் ஹீரோவாக களமிறங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதனிடையே விஜய் சேதுபதியின் இரண்டாவது மகளான ஸ்ரீஜா சேதுபதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு பாவடை தாவணி அணிந்து கொண்டு தனது அப்பா,அண்ணண்,அம்மாவுடன் நிற்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. விஜய் சேதுபதியின் மகள் இவ்வளவு அழகா என்றும் இவ்வளவு நாள் விஜய் சேதுபதி அவரது மகளை ஒழித்து வைத்துவிட்டாரே என நெட்டிசன்கள் அவர் மேல் செம காண்டில் உள்ளனர். தற்போது ஸ்ரீஜாவின் புகைப்படம் வைரலாகும் நிலையில், கூடிய விரைவில் அவர் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: பகத் பாசிலின் அஸ்திவாரத்தை அசைக்க வந்த நடிகர்.. விஜய் சேதுபதி எஸ் ஜே சூர்யாவுக்கு ஏற்பட்ட கலக்கம்

 

Trending News