வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஜாதி பெயரை சொல்லி போடப்பட்ட வழக்கு! விஜய் சேதுபதி அவர் பாணியில் கொடுத்த பதில்

சமீபகாலமாக விஜய் சேதுபதி நடவடிக்கையில் ஒரு சில மாற்றங்கள் இருப்பதாக சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். அதுமட்டுமில்லாமல் பொது இடங்களிலும் கோபமாக பேசி வருவதாக பலரும் கூறி வந்தனர்.

அதாவது மாஸ்டர் பட வெற்றியின் போது விஜய் சேதுபதியிடம் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பதாக இருப்பது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அனைவரும் முன்னிலும் கோபமாக பதிலளித்தார். இதனால் பலரும் விஜய் சேதுபதி மெத்தனமாக நடந்து கொள்வதாக கூறி வந்தனர்.

சமீபத்தில் விஜய் சேதுபதி விமான நிலையத்தில் இருந்து வரும்போது அவரது ரசிகர் ஒருவர் வாழ்த்து தெரிவிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது விஜய் சேதுபதி கடுமையாக திட்டியதாகவும் மேலும் அவரது மேலாளர் ஜான்சன் கோபத்துடன் நடந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

ஆனால் அடுத்தநாள் விஜய் சேதுபதி மீது எந்த தப்பும் இல்லை என சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறிவந்தனர். இதனால் அவரது ரசிகர் விஜய் சேதுபதி தன்னை இழிவாக பேசியதாகவும் மேலும் பொதுவெளியில் தனது ஜாதி பெயரை வைத்து திட்டியதாகவும் மனு ஒன்றில் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் விஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அப்போது விஜய் சேதுபதி தரப்பிலிருந்து வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆஜராகி விஜய் சேதுபதி மீது அவதூறு வழக்கு என நீதிமன்றத்தில் வாதாடினார். விளம்பர நோக்கத்துடன் வழக்கு போடப்பட்டதாக குற்றம்சாட்டியது. அபராதத்துடன் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென கூறினார்.

இதற்கு மகாத்மா காந்தி இது விளம்பரத்திற்காக போடப்பட்ட வழக்கு இல்லை எனவும் அவரது வழக்கறிஞர் இன்ஸ்டன்ட் தினேஷ் ஆஜராகி நோடிஸ் வந்ததால் தான் பதில் மனு தாக்கல் செய்ததாக கூறினார். இதையடுத்து இறுதி விசாரணையாக ஜனவரி 11ஆம் தேதி தள்ளிவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Trending News