திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

நயன்தாராவுக்காக பட வாய்ப்புகளை ஏற்க மறுக்கும் விஜய்சேதுபதி.. பழக்கத்திற்காகவே இறங்கி செய்யும் காரியம்

தற்போது விஜய் சேதுபதி, சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 படத்தில் இருந்து விலகிவிட்டார் காரணம் சம்பளப் பிரச்சனை என்று கூறப்பட்டது. ஆனால் நயன்தாராவிற்காக தான் பட வாய்ப்பு ஏற்க மறுத்திருக்கிறார்.

தற்பொழுது விக்னேஷ் சிவன், அஜித் படத்திலிருந்து விலக்கப்பட்டதை அடுத்து நயன்தாரா, விஜய் சேதுபதிக்கு அழைப்பு விடுத்து இந்த படத்தில் நீங்கள் நடிக்க முடியுமா எனக் கேட்டுள்ளார். இவர்களுக்கிடையே இருக்கும் பழக்கவழக்கத்திற்காகவே விஜய் சேதுபதி இறங்கி செய்த காரியத்தை பற்றிய விவரம் தற்போது வெளியாகி உள்ளது.

Also Read: நம்ப வைத்து மோசம் செய்த அஜித்.. பாக்ஸ் ஆபிஸ் ஹீரோவிடம் தஞ்சமடைந்த விக்னேஷ் சிவன்

ஏனென்றால் கடந்த ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா மூவரும் இணைந்து நடித்த ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இதற்கு முன்பு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் காதலிக்க ஆரம்பித்த ‘நானும் ரவுடி தான்’ படத்தில் விஜய் சேதுபதி தான் கதாநாயகன்.

ஆகையால் இந்த மூன்று பேரின் கூட்டணி தொடர்வதால் அவர்களிடையே நட்பும் தொடர்கிறது. அதை வைத்து தற்போது  விக்னேஷ்க்கு வாய்ப்பு கொடுக்கும்படி நயன்தாரா, விஜய் சேதுபதியிடம் கையேந்தி நிற்கிறார். 

Also Read: அஜித் படத்தின் சீக்ரெட் கசிந்து விடும் என்பதால் கட்டளை போட்ட லைக்கா.. ஏகே 62 படத்திற்கு போட்ட பூஜை

இதற்கு மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் உடனே சரி என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார். விஜய் சேதுபதி, சுந்தர் சி படத்திற்கு கொடுத்த கால் சிட்டை நயன்தாராவுக்கு கொடுத்துள்ளார். இதனால் தான் சுந்தர் சி படத்தை அதிக சம்பளம் கேட்டு விலகி வந்தது உண்மை புரிந்துள்ளது.

பொதுவாகவே விஜய் சேதுபதி பழக்கத்துக்காகவே நடிப்பார். சிறிய பட்ஜெட், பெரிய பட்ஜெட் என்றெல்லாம் பார்க்க மாட்டார். தோல்வி அடைந்தாலும் கவலைப்பட மாட்டார். அந்த வகையில் தற்போது நயன்தாரா கேட்டதற்காக விக்னேஷ் சிவன் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒத்துக் கொண்டுள்ளார்.

Also Read: அடுத்தடுத்த தோல்வியால் சுந்தர் சி எடுத்துள்ள முடிவு.. லோ பட்ஜெட்டில் கல்லா கட்ட கையில் எடுத்த அஸ்திரம்

Trending News