ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

விஜய்சேதுபதி ரிஜெக்ட் செய்த மொக்க கதை.. கெஞ்சு கூத்தாடி நடிக்க வைத்த விக்னேஷ் சிவன்

முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் விஜய் சேதுபதி சினிமாவில் இப்படி ஒரு இடத்தை அடைய முடியுமா என்று கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை. ஆனால் இந்த இடத்திற்கு வருவதற்கு முன்னால் பணரீதியாக ரொம்பவே கஷ்டப்பட்டு வந்திருக்கிறார். அதனாலயே அந்த வெற்றியை தொடர்ந்து எப்படி தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிந்து இருக்கிறது. அத்துடன் இவர் நடிக்கும் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் அசால்டாக தத்ரூபமாக நடித்துக் கொடுக்கக்கூடிய திறமை இவரிடம் இருக்கிறது.

அப்படிப்பட்ட இவர் சினிமாவில் ரொம்பவே ஆச்சரியப்பட்டு பார்த்த நடிகை யார் என்றால் நயன்தாரா. இவர் கூட எப்படியாவது நடித்து விட மாட்டோமா என்று ஏங்கிக் கொண்டிருந்த நேரத்தில் விக்னேஷ் சிவன் ஒரு கதையை ரெடி பண்ணி இவரிடம் கூறியிருக்கிறார். ஆனால் அந்த கதையில் விஜய் சேதுபதிக்கு நடிப்பதற்கு விருப்பமில்லை. பிறகு விக்னேஷ் சிவன் ரொம்பவே கெஞ்சி கூத்தாடி கேட்டிருக்கிறார்.

Also read: சினிமாவை தாண்டி பிசினஸில் கல்லா கட்டும் நயன்தாரா.. ஒரு வருடத்திற்கு இவ்வளவு கோடிகளில் வருமானமா?

ஆனால் விஜய் சேதுபதி கொஞ்சம் எனக்கு டைம் கொடு அப்புறமாக நான் சொல்கிறேன் என்று கூறிவிட்டார். இதற்கிடையில் விக்னேஷ் சிவன் இந்த கதையை எழுதும்போதே எந்த ஒரு ஹீரோ நடித்தாலும் வெற்றி பெற வேண்டும் என்பதை மனதில் வைத்து தான் கதையை ரெடி பண்ணி இருக்கிறார். அப்படி இருந்தும் ஏன் விஜய் சேதுபதியை கெஞ்சினார் என்றால் அப்போது இவர் மட்டும் தான் விக்னேஷ் சிவனை ஒரு இயக்குனராக மதித்து பேசி இருக்கிறார்.

அதாவது விக்னேஷ் சிவன் போடா போடி என்ற படத்தில் தான் இயக்குனராக அறிமுகமானார். ஆனால் அந்தப் படத்தின் கதை ரொம்பவே மொக்கையாக இருந்ததால் பெரிய அளவில் பேசப்படவில்லை. ஆனாலும் விஜய் சேதுபதி தனிப்பட்ட முறையில் விக்னேஷ் அவர்களுக்கு போன் பண்ணி இந்த படம் நான் பார்த்தேன் கதை நன்றாக இருக்கிறது உனக்கு என்னுடைய பாராட்டுக்கள் என்று கூறி இருக்கிறார்.

Also read: என்ன விட ராங்கியா இருப்பா போல.. விக்னேஷ் சிவனிடமே நயன்தாராவை பற்றி ஒத்து ஊதிய நடிகை

அது மட்டும் இல்லாமல் நீ வேறு ஒரு கதை எனக்காக ரெடி பண்ணி சொல்லு அதில் நான் நடிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். அதனால் தான் கதையை ரெடி பண்ண உடனே விஜய் சேதுபதி தான் இவருடைய ஞாபகத்திற்கு வந்திருக்கிறது. அதன்பின் உருவாகின கதை தான் நானும் ரவுடிதான். ஆனாலும் விஜய் சேதுபதிக்கு ஒரு பயம் இந்த படம் சரியா வருமா வராதா என்று ஒரு தயக்கத்தில் ஓகே சொல்லாமல் இழுத்து அடித்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுதுதான் விக்னேஷ் சிவன் இந்த படத்தின் ஹீரோயின் நயன்தாரா என்று கூறியிருக்கிறார். அடுத்த நிமிஷமே விஜய் சேதுபதி இந்த படத்தில் நான் ஹீரோவாக நடிக்கிறேன் என்று கூறிவிட்டார். அப்படி இவர்கள் கூட்டணியில் வெளிவந்த படம் நானும் ரவுடி தான். இப்படம் இவர்கள் எதிர்பார்த்தபடியே இவர்களுக்கு வெற்றி படமாக தான் அமைந்தது.

Also read: குரங்கு பட இயக்குனரின் கூட்டணியில் இணையும் விஜய் சேதுபதி.. அதிரடியாக வெளிவந்த 50வது படத்தின் அப்டேட்

Trending News