வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ராஜாவா அரக்கனா.? ஆண்டவர் இடத்தை நிரப்புவாரா VJS, எதிர்பார்ப்பை கிளப்பிய பிக்பாஸ் 8

Biggboss 8: விஜய் டிவியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் 8 நேற்று கோலாகலமாக தொடங்கி இருக்கிறது. புது தொகுப்பாளராக விஜய் சேதுபதி களம் இறங்கிய நிலையில் அவர் ஆண்டவர் இடத்தை நிரப்புவாரா என்ற கேள்வியும் தற்போது முளைத்துள்ளது.

அதுவே ஒரு விவாதமாகவும் மாறி இருக்கிறது. நேற்றைய தினத்தில் அவர் போட்டியாளர்களை வரவேற்ற விதமும் அவர்களுடன் பேசிய விதமும் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. அதே சமயம் எதார்த்தமாக பேசுவது போல் சில தக் லைஃப் கமெண்ட்டுகளையும் அவர் கொடுத்தார்.

உதாரணத்திற்கு ரவீந்தரிடம் பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்ததில் நல்ல வருமானம் போல என கேட்டார். அதேபோல் ரஞ்சித் மேடை ஏறிய போது அவருடைய நண்பர் விஜய் சேதுபதியிடம் சாப்டீங்களா எங்க ஊர்ல எல்லாம் இப்படித்தான் கேட்போம் என கூறினார்.

ஆண்டவர் போல் கலக்குவாரா விஜய் சேதுபதி.?

உடனே அவர் எல்லா ஊர்லயும் இதே தான் கேட்பாங்க என பதில் கொடுத்தார். இப்படி அவருடைய பேச்சு கலகலப்பாகவும் நறுக்கு தெறித்தது போலவும் இருந்தது. இதுவே அந்த இடத்தில் கமல் இருந்திருந்தால் ஓட்டுக்காக ஏதாவது பேசி இருப்பார் என்பது ஆடியன்ஸின் கருத்து.

மேலும் விஜய் சேதுபதி பேசும் போது நான் நிகழ்ச்சியில் தீர்ப்பு சொல்வது சில சமயம் ராஜாவாகவும் தெரியலாம் சில சமயம் அரக்கனாகவும் தெரியலாம். எதுவாக இருந்தாலும் ஓட்டு போட்ட உங்கள் மீது நான் பழியை போட்டு விடுவேன். நீங்கள் என் மீது பழியை போட்டு தப்பித்துக் கொள்ளுங்கள் என்றார்.

இப்படி அவர் பேசிய தோரணையும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதமும் தற்போது பாஸ் மார்க் வாங்கி இருக்கிறது. ஆனால் ஆண்டவர் இடத்தை பிடிக்கும் அளவுக்கு இவர் சுவாரஸ்யம் காட்டுவாரா என்பது இந்த வார இறுதியில் தெளிவாகிவிடும்.

இருந்தாலும் ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்பது போல் பிக் பாஸ் மேடை நேற்று விஜய் சேதுபதியால் கலகலப்பாக இருந்தது. தற்போது வீட்டுக்குள் 18 போட்டியாளர்கள் நுழைந்திருக்கும் நிலையில் யார் மக்களின் நன்மதிப்பை பெறுவார்கள் என்பதை பார்ப்போம்.

கோலாகலமாக ஆரம்பமான பிக் பாஸ் 8

Trending News