திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

சம்பளத்தை உயர்த்தி கேட்ட விஜய் சேதுபதி.. அந்தர்பல்டி அடித்து இயக்குனரை ஹீரோவாக்கிய முதலாளி

விஜய் சேதுபதி ஒரு பிஸியான நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இவருக்கு எப்போதுமே ரசிகர்களிடம் தனி வரவேற்பு இருக்கும்.  அப்படிப்பட்ட இவர் தற்போது பாலிவுட்டிலும் பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அத்துடன் தமிழில் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதே சமயம் சுந்தர்.சி-க்கு எந்த படங்களும் சமீபத்தில் வெற்றி அடையவில்லை.  இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படங்கள் எல்லாம் இவருக்கு கலவையான விமர்சனங்களை கிடைத்தது என்றே சொல்லலாம். அதனால் இவருடைய ஹிட் படமான அரண்மனை படத்தை கையில் எடுப்பதாக தகவல் வெளிவந்தது. அதற்காக அரண்மனை 4 படத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைப்பதாக இருந்தது.

Also read: ஹாட்ரிக் விக்கெட் எடுத்த சுந்தர் சி.. இது சுத்தமா செட் ஆகல அதுக்கு போயிடுங்க.!

இதைக் குறித்து அவரிடம் கேட்டபோது நான் நடித்துக் கொடுக்கிறேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் அதற்காக அவர் அதிக சம்பளம் கேட்டிருக்கிறார். இதை கேட்ட தயாரிப்பாளர் அதிக சம்பளம் கொடுக்க முடியாது என்று கண்டிஷனாக கூறிவிட்டார். இதனால் விஜய் சேதுபதியும் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டார்.

இதனால் சுந்தர் சி ஒரு புகழை பார்க்க வேண்டும் என்று கட்டிய மனக்கோட்டை தவிடு பொடியாகி விட்டது என்று கூறலாம். ஆனால் இதிலிருந்து மீண்டு வரவேண்டும் என்பதற்காக வேறு வழி இல்லாமல் சுந்தர் சி அவர்களே இந்த படத்தில் நாயகனாக நடிக்கப் போகிறார். மேலும் இதில் காமெடியனாக யோகி பாபு நடிக்க இருக்கிறார்.

Also read: சுந்தர் சியின் அடுத்த பட டைட்டில் வெளியானது. ஸ்பைடர் மேனை மிஞ்சும் விஷாலின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

பொதுவாகவே சுந்தர்.சி படங்கள் காமெடிக்கு பஞ்சமே இருக்காது என்ற அளவிற்கு இவரது படங்களில் நகைச்சுவையை அதிக அளவில் வைத்திருப்பார். அதிலும் இவரது படமான அரண்மனை படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் பார்த்து ரசிக்கும் படி தான் எடுத்திருப்பார். அந்த வகையில் அரண்மனை 4 படம் வெற்றி அடையும் என்பது உறுதியானது.

மேலும் இந்தப் படத்தை மிகப் பிரமாண்டமான முறையில் உருவாக உள்ளது. அத்துடன் இந்த படத்தை மூன்று மாதத்திற்குள் எடுத்து முடித்து விட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.  இது குறித்து தகவல்கள் கூடிய விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது.

Also read: சுந்தர் சியின் அடுத்த பட டைட்டில் வெளியானது. ஸ்பைடர் மேனை மிஞ்சும் விஷாலின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

Trending News