Vijay Sethupathi Salary: அஸ்வின் மடோன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் இணைந்து நடித்த மாவீரன் திரைப்படம் நேற்று ரிலீசாகி வசூலில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை தூக்கி நிறுத்தும் விதமாக விஜய் சேதுபதி கொடுத்த வாய்ஸ் ஓவர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
சிலர் விஜய் சேதுபதியின் வாய்ஸை கேட்பதற்காகவே இந்த படத்தை பார்க்க செல்கின்றனர். அந்த அளவிற்கு இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனை ஓவர் டெக் செய்துள்ளார். ஏனென்றால் விஜய் சேதுபதி பேசிய அந்த அசரீரி குரல் மூலம் தான் சிவகார்த்திகேயனிடம் இருக்கும் மாவீரனை தட்டி எழுப்பி இருக்கின்றனர்.
Also Read: மாவீரன் இந்த படத்தின் காப்பியா.? தேவையில்லாமல் உளறி வாங்கி கட்டிக் கொண்ட ப்ளூ சட்டை
அப்படி முக்கியத்துவம் வாய்ந்த அந்த அசரீரி குரலுக்கு விஜய் சேதுபதி எவ்வளவு சம்பளம் வாங்கி இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. விஜய் சேதுபதி இளம் தலைமுறை நடிகர்களின் படங்களில் எந்தவித போட்டி மனப்பான்மையும் இல்லாமல் அவர்களுடன் இணைந்து நடித்து ஹிட் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்திற்கும் விஜய் சேதுபதியின் குரல் பக்க பலமாக இருந்தது. அந்தக் குரலை கேட்டு தனக்கு வீரம் வருவது போல் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடித்து மாஸ் காட்டியிருக்கிறார். இதற்காக விஜய் சேதுபதி 3 நாட்கள் கால் சீட் ஒதுக்கி டப்பிங் பேசி கொடுத்துள்ளார்.
Also Read: மாவீரன் சிவகார்த்திகேயனுக்கு வெற்றியா, தோல்வியா.? முதல் நாள் வசூல் ரிப்போர்ட்
இதற்காக அவர் ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் மடோன் அஸ்வினின் மீதுள்ள நட்பு காரணமாக இதை செய்து கொடுத்திருக்கிறார். தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் செம பிஸியாக நடித்துக் கொண்டே இருக்கும் விஜய் சேதுபதி பிரின்ஸ் பட தோல்வியால் வெற்றிக்காக போராடும் சிவகார்த்திகேயனுக்கு கை கொடுத்து தூக்கி விடுவதை பார்த்த ரசிகர்களும், இவரே மாமனிதன் என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றனர்.
அதுமட்டுமல்ல இவர் பெயருக்கேற்ப மக்கள் செல்வன் தான் என்றும், தமிழ் சினிமா ஆரோக்கியமான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு இதுவே சான்றாகவும் அமைகிறது. நிஜமாகவே தமிழ் சினிமாவில் இருக்கும் மற்ற நடிகர்களை காட்டிலும் விஜய் சேதுபதி கொஞ்சம் வித்தியாசமாகவே நடந்து கொள்வது பலரையும் ஆச்சரியப்படுத்துகிறது.