வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

தாயே தாயே.. மகளென வந்தாய்.. சாச்சனாவை தொடர்ந்து காப்பாற்றும் VJS

கடந்த வார இறுதியில் ஷிவா பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இவர் சிறப்பான ஆட்டக்காரர் என்று சொல்ல முடியாது. ஆமை ஒடுக்குள் எப்படி ஒளிந்திருக்குமோ, அதே போல தான் இருக்கிறார். இருப்பினும், கடந்த வாரம் உண்மையில் எலிமினேட் ஆனது ஷிவா இல்லை. அவரை விட குறைவான வாக்குக்கள் பெற்று ஒருவர் இருந்தார்.

அவர் எப்போதும் தன்னை குழந்தையாக பாவித்துக்கொண்டு, க்யூட் என்ற பெயரில் cringe-ஆக சில விஷயங்களை செய்வார். அது வீட்டில் இருப்பவர்களுக்கும் சரி, வெளியில் இருந்து பார்க்கும் நமக்கும் சரி கொஞ்சம் சலிப்பாக தான் உள்ளது.

இந்த முறை பிக் பாஸ் ஸ்வாரசியாமாக சொல்லாவிட்டாலும், கடந்த 2 வாரங்களாக கொஞ்சம் நன்றாக தான் இருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்த அளவில், தற்போது TRP இருக்கும் நிலையில், சாச்சம்மா தேவி தான் முக்கிய கன்டென்ட். அவர் செய்யும் வேலைகள் ஆத்திரத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்தாலும் கூட, அது அனைத்தும் கன்டென்ட் ஆக மாறிவிடுகிறது. அதனால் தான் என்னவோ இவரை வெளியில் அனுப்புவதற்கு பிக் பாஸ்-க்கே விருப்பம் இல்லை.

இது பிக் பாஸ் எடுத்த முடிவா இல்லை தந்தை விஜய் சேதுபதி எடுத்த முடிவா என்று தெரியவில்லை. வோட்டை பொறுத்த அளவில், சாச்சனா தான் மிக குறைவான வாக்குகளை பெற்று இருக்கிறார்.

இந்த நிலையில், இதில் கடுப்பான ஷிவா மனைவி சுஜா, “ஆறாவது இடத்திலிருந்த ஷிவா evicted.. ஆனா கடைசி இடத்துல இருந்த சாச்சனா saved.. இது எப்படி சாத்தியமாச்சு.. அதான் ஹோஸ்ட் அப்பா இருக்காரே..” என்று நக்கலாக பதிவிட்டுள்ளார்.

இது அவருடைய எண்ணம் மட்டுமல்ல, பார்க்கும் எல்லா ஆடியன்ஸின் எண்ணமாகவும் உள்ளது. சாச்சனா-வை எதுவுமே கேள்வி கேட்க மறுக்கிறார் vjs.. மகாராஜா படத்தோட effect இன்னும் போகலையா என்று கேட்க ஆரம்பித்துவிட்டனர்.

- Advertisement -

Trending News