திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

எல்லை மீறி கொச்சையாக பேசிய அருண்.. கொந்தளிக்கும் பிக்பாஸ் ஆடியன்ஸ், தட்டிக் கேட்பாரா VJS.?

Biggboss Arun: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினம் தினம் ஏதாவது ஒரு பிரச்சனை கொழுந்து விட்டு எரிகிறது. அதில் இன்று டெவில் தேவதைகள் டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் வீடே இப்போது இரத்தக் களரியாக மாறி இருக்கிறது.

காலையிலிருந்து அடுத்தடுத்து ஆறு ப்ரோமோக்கள் வெளிவந்து எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் டெவில் டீம் போட்டியாளர்கள் வரம்பு முறை இல்லாமல் தேவதைகளை கொடுமைப்படுத்தி வருகின்றனர்.

என்னதான் டாஸ்க்காக இருந்தாலும் ஒரு மனிதாபிமானம் வேண்டாமா என்ற ஆதரவு குரல்கள் சோசியல் மீடியாவில் எழுந்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க தற்போது அருண் கொச்சையாக பேசிய ஒரு வார்த்தை சர்ச்சையாக மாறியுள்ளது.

ஆரம்பத்தில் சாதுவாக இருந்த இவர் தற்போது சுயரூபத்தை காட்ட தொடங்கிவிட்டார். எதற்கெடுத்தாலும் யாரையாவது கிண்டல் செய்வது மட்டம் தட்டுவது என்பது தான் இவருடைய வேலையாக இருக்கிறது.

ஓவர் ஆட்டம் போடும் பிக் பாஸ் அருண்

அதில் தற்போது இவர் கோவா அணியினருடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ரஞ்சித் தன்னை பார்ப்பதாக ரயான் ஜாக்லினிடம் சொல்கிறார். உடனே அவர் உன் வாயை மட்டுமா அவர் பார்க்கிறார் என டபுள் மீனிங்கில் பேசுகிறார்.

இதைத் தாண்டி அருண் படத்தில் ஹீரோயின்கள் பலவந்த காட்சி வரும்போது ஹீரோ பார்ப்பாங்கல்ல அப்படித்தான் என சொல்லி சிரிக்கிறார். அவர் ஏதோ பெரிய ஜோக் சொன்னதைப் போல கோவா அணி விழுந்து விழுந்து சிரிக்கிறது.

அந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில் அனைவரும் அருணை ரோஸ்ட் செய்து வருகின்றனர். இதை நிச்சயம் விஜய் சேதுபதி வார இறுதியில் கேட்க வேண்டும். ஒரு நேஷனல் டெலிவிஷனில் குழந்தைகள் பார்க்கும் நிகழ்ச்சியில் இப்படித்தான் பேசுவார்களா.

இதை விஜய் டிவி எப்படி அனுமதிக்கிறது. போட்டியாளர்களுக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாதா என எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஆக மொத்தம் வார இறுதியில் விஜய் சேதுபதி இவருக்கு சிறப்பான அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதுதான் அனைவரின் கோரிக்கை.

Trending News