புதன்கிழமை, ஜனவரி 15, 2025

உப்பு கரம் மசாலா.. இதுக்கு எல்லாம் ஒரு சண்டையா? கேம் விளையாடுறீங்களா? இல்ல வேற எதுமா! விளாசிய விஜய் சேதுபதி

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் துவங்கியது. இதில் புதிய ஹோஸ்டாக களமிறங்கியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. முதல் நாளிலேயே அவரது நடை, உடை, பாவனைகள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்த நிகழ்ச்சிக்கு ஏற்படுத்திக் கொடுத்தது.

விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ், கடந்த 6ம் தேதி சிறப்பான துவக்க விழாவுடன் தன்னுடைய 8வது சீசனை துவங்கியது. இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ளதற்கு முக்கியமான காரணமாக இருந்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி.

முதல் நாளில் சிரித்த முகத்தோடு இருந்த விஜய் சேதுபதி இந்த வாரம் விளாசி எடுக்க போகிறார் என்பது மட்டும் தெரிகிறது. இதற்கான முதல் ப்ரமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் பிரம்மாண்டமான அரங்கத்தில்

இது கேம் ஷோ வா இல்ல!

கோட்டை போட்டு கேமை ஆட சொன்னால், நான் உப்பு தருகிறேன், தண்ணீர் தருகிறாயா, கரம் மசாலா இருக்கா கொத்தமல்லி கட்டைக் காணோம் ன்னு குறை சொல்லிக்கிட்டு இருக்கீங்க.! இவர்கள் கேம் ஆட சென்றிருக்கிறார்களா அல்லது ஏதாவது டூருக்கு சென்றிருக்கிறார்களா என்று தனக்கு தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களின் பஞ்சாயத்து என்ன என்பதை பேசி முடித்துவிடுவோம் என்று கூறுவதாக இந்த பிரமோவில் காணப்படுகிறது. ஏற்கனவே பஞ்சாயத்து, இவரு வேற எரியுற தீயில் பெட்ரோலை விட்டு போக போகிறார் என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Trending News