புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

சண்டைக் காட்சிகளில் அசத்தும் குட்டி விஜய் சேதுபதி..

தமிழ்சினிமாவில் கைவசம் ஏகப்பட்ட படங்களை வைத்துக்கொண்டு பிஸியாக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் படங்கள் மட்டும் அல்லாமல் வெப்சீரிஸ் மற்றும் சமையல் நிகழ்ச்சி ஒன்றையும் தொகுத்து வழங்கவுள்ளார். இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன.

சினிமாவில் தன்னை உறுதியாக நிலை நிறுத்திக் கொண்ட விஜய் சேதுபதி தனது மகனையும் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்துள்ளார். அதன்படி விஜய் சேதுபதியின் மகன் சூர்யா 2015ஆம் ஆண்டே ‘குட்டி’ சேதுபதியாக நானும் ரவுடிதான் படத்தில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து 2019ஆம் ஆண்டு விஜய் சேதுபதியுடன் இணைந்து சிந்துபாத் என்ற படத்தில் நடித்திருந்தார். தந்தையைப் போலவே மகனும் தற்போது வித்தியாசமான காட்சிகளில் பட்டையைக் கிளப்பி வருகிறார். தற்போது சூர்யாவின் இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Vijay Sethupathi – Suriya

அண்மையில் மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் பிரபலமான கோகுல்நாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். சண்டைக்காட்சிக்கான வீடியோவான அதில் சூர்யா குத்துவது, உதைப்பது, தற்காத்துக்கொள்வது என முழு ஸ்டண்ட் ஒன்றை நிகழ்த்தி ஆச்சரியப்படுத்தியிருந்தார்.

அதைப் பார்த்த பலரும் எதிர்காலத்துக்காக சூர்யா தற்போதே தன்னை தயார்படுத்தி வருகிறார் என கமெண்ட் செய்திருந்தனர். சிந்துபாத் படத்தில் அவரது நடிப்புக்காக அனைவரும் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதியை போலவே அவரது மகன் சூர்யாவும் எதிர்காலத்தில் மிகப் பெரிய ஹீரோவாக வலம் வர வாய்ப்புள்ளது என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

Trending News