கோலிவுட்டில் தனது விடா முயற்சியால் கால்பதித்து, சிறு சிறு வேடங்களில் நடிக்க தொடங்கி, தற்போது முன்னணி நடிகர்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் ஹீரோ, வில்லன், குணசித்திர வேடம், பாடகர் என தனது பன்முக திறமையை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதி தமிழைத் தவிர தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறாராம். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, விஜய் சேதுபதி நடித்த பவானி ரோலுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த அளவிற்கு வெறித்தனமாக நடித்திருந்தார் விஜய் சேதுபதி.
இந்தநிலையில் விஜய்சேதுபதி தெலுங்கில் நடித்துள்ள ‘உப்பனா’ படத்தின் அறிமுக விழாவில் தெலுங்கில் பேசியிருக்கிறார். அதாவது தமிழில் பல வித்யாசமான கதாபாத்திரங்களில் நடித்து, ரசிகர்கள் பலரை தனது அன்பால் கைக்குள் போட்டு இருப்பவர் விஜய்சேதுபதி. தற்போது தெலுங்கிலும் அதையே பாலோ செய்ய தொடங்கிவிட்டார்.
தெலுங்கு ரசிகர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக படத்தின் அறிமுக விழாவில் பேசிய விஜய் சேதுபதி, முழுவதுமாக தெலுங்கில் பேசி இருக்கிறார். அவ்வப்போது ஆங்கிலம் எட்டிப் பார்த்தால் கூட விஜய் சேதுபதி தெலுங்கில் பேசியது பலரை வியப்படைய வைத்ததாக தெரிகிறது.
மேலும் விஜய் சேதுபதி விழாவில், படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு, ரசிகர்கள் அனைவரையும் தியேட்டரில் சென்று படம் பார்க்க வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது விஜய் சேதுபதியின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதோடு, அவரது ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.
அதேபோல், கடந்த 2020 ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக வேண்டிய இந்தப் படம் கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக வருகின்ற பிப்ரவரி 12ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
விஜய்சேதுபதி உப்பனா படத்தின் அறிமுக விழாவில் பேசிய வீடியோவை காண கீழே கிளிக் செய்யவும்.