வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

ஜிகர்தண்டா படத்தில் சித்தார்த்க்கு பதில் இவர்தான் நடிக்க வேண்டியது.. உஷாரா எஸ்கேப் ஆயிட்டாரு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் நடிப்பில் கடந்த 2014ல் வெளியான படம் ‘ஜிகர்தண்டா’. இப்படத்தில் ஹீரோ ரோலைவிட வில்லன் பாத்திரம் மிக வலுவானதாக அமைந்திருந்தது. இதில் வில்லனாக நடித்த பாபி சிம்ஹாவிற்கும் பாராட்டுக்கள் குவிந்தது.

இப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹா வென்றார். அதுமட்டுமல்லாமல் விவேக் ஹாசனுக்கு எடிட்டருக்கான தேசிய விருது கிடைத்தது. தேசிய விருது வென்றபின் சூப்பர்ஸ்டார் ரஜினி பாபி சிம்ஹாவிற்கு போன் செய்து பேசியதாக அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

தேசிய விருதை வென்றதைவிட தலைவரின் போன் கால் என்னை மிகவும் சந்தோசப்படுத்தியது எனவும் அவர் கூறியிருந்தார். இதையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படத்தில் ரஜினியுடன் சேர்ந்து வில்லன் பாத்திரத்தில் நடித்திருந்தார் பாபி சிம்ஹா.

ஜிகர்தண்டா படத்தில் சிறு வயது பாபி சிம்ஹாவாக நடிகர் விஜய் சேதுபதி ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். பாபி சிம்ஹா கேரக்டர் வலுவான கேரக்டர், அதில் விஜய் சேதுபதியே இருந்திருக்கும் என பலர் இப்படம் வெளியானபோதே கருத்து தெரிவித்திருந்தனர்.

சித்தார்த் வேடத்தில் முதலில் நடிக்கவிருந்தது விஜய் சேதுபதிதான் என தற்போது தகவல் வந்துள்ளது. அதாவது, விஜய் சேதுபதியைத்தான் முதலில் சித்தார்த் கேரக்டரில் நடிக்க வைக்க விரும்பினாராம் கார்த்திக் சுப்புராஜ். ஆனால், இந்த கேரக்டர் அவருக்கு செட் ஆகாது என மறுத்தாராம் தயாரிப்பாளர்.

vijay-sethupathy-cinemapettai
vijay-sethupathy-cinemapettai

பின்னர் தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்குனரிடம் எடுத்து பேசி அந்த கேரக்டரில் சித்தார்த்தை நடிக்க வைத்தாராம். அதன்பின்னரே விஜய் சேதுபதிக்கு சிறிய வேடம் கொடுத்தாராம் இயக்குனர்.

Trending News