சமீபகாலமாக திரைநட்சத்திரங்கள் தாக்கப்படுவது வழக்கமாக உள்ளது.பொதுவாக திரை நட்சத்திரங்களை பார்த்தவுடன் ரசிகர்கள் அவர்களுடன் பேசுவதும், புகைப்படம் எடுப்பதையும் வழக்கமாக வைத்திருப்பார்கள். இப்பொழுது பிரபலங்களை தாக்குவது போன்ற செயல்கள் அதிகமாக நடைபெறுகிறது.
விஜய் சேதுபதி: சமீபத்தில் இறந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவர்களுக்கு மரியாதை செலுத்த சென்ற விஜய் சேதுபதி தாக்கப்பட்டுள்ளார். விஜய் சேதுபதி பெங்களூர் விமான நிலையத்தில் சென்று கொண்டிருக்கும்போது பின்னாலிருந்து ஒருவர் விஜய் சேதுபதியை எட்டி உதைப்பது போன்ற ஒரு வீடியோ காட்சி வெளியானது. ஆனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.
சிவகார்த்திகேயன்: சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு சென்று பல வெற்றிப் படங்களைத் தரும் இளம் நடிகர் தான் சிவகார்த்திகேயன். சமீபத்தில் மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரிக்கு நிகழ்ச்சிக்கு சிவகார்த்திகேயன் சென்றுள்ளார். அங்கு உலகநாயகன் கமலஹாசன் ரசிகர்கள் அவரை தாக்கியுள்ளார்கள். உடனடியாக சிவகார்த்திகேயனின் உதவியாளர்கள் அவரை அங்கிருந்து பத்திரமாக வெளியே அழைத்துச் சென்றுள்ளார்.
தளபதி விஜய்: தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். சில வருடங்களுக்கு முன்பு ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்த வெல்ஃபேர் நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்று விட்டு விழுப்புரத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். அப்பொழுது தளபதியை பார்ப்பதற்கு அங்கு மிகப் பெரிய கூட்டம் கூடியது. அதில் விஜய்யை பிடிக்காத நபர்கள் விஜய் மீது தாக்குதலில் ஈடுபட்டார்கள். அங்கிருந்து உடனடியாக விஜய், அவரின் ரசிகர்கள் பாதுகாப்புடன் திருமண மண்டபத்தின் பின்புறம் வழியாக காரில் ஏறி சென்றார்.
இயக்குனர் வெற்றிமாறன்: தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாது இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். தமிழ்நாட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு காவேரி போராட்டமும், ஸ்டெர்லைட் போராட்டமும் நடந்து கொண்டிருப்பதால் சென்னையில் ஐபிஎல் நடக்கக் கூடாது என அண்ணா சாலையில் நடத்தப்பட்ட போராட்டத்தில் பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். அந்தப் போராட்டத்தில் இயக்குனர் வெற்றிமாறன் மீது போலீசார் தாக்குதல் செய்யப்பட்டுள்ளார்கள்.
கோபிநாத்: விஜய் டிவியில் முக்கிய தொகுப்பாளர்களில் ஒருவர் தான் கோபிநாத். தற்போது மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் நடுவராகவும், நீயா நானாவில் தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறார். கோபிநாத் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்களின் இறுதி மரியாதைக்கு செல்லும்பொழுது கூட்ட நெரிசலால் போலீசாரால் தாக்கப்பட்டார் என்ற செய்தி வெளியானது.