ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஓவரா பேசிய விஜய் சேதுபதி.. ஒட்டுமொத்தமா வச்சு செய்யும் நெட்டிசன்கள்

இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவின் பிஸியான நடிகர் என்றால் அது விஜய் சேதுபதிதான். கிடைக்கும் சின்னச் சின்ன வாய்ப்புகளில் கூட நடித்து செமையாக கல்லா கட்டி வருகிறார். படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்ற சந்தேகம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் எழுந்துள்ளது. அதற்கு காரணம் அவருடைய சமீபத்திய படங்கள் தான்.

முழுசாக அந்த படத்தை உட்கார்ந்து ஒருமுறை கூட பார்க்க முடியாத அளவுக்கு படு மோசமான படங்களாகவே கடந்த சில படங்கள் விஜய் சேதுபதிக்கு அமைந்தது. இருந்தாலும் இடையில் ஏதாவது ஒரு படம் மூலம் வெற்றி கொடுத்து தன்னுடைய மார்க்கெட்டை மீட்டு விடுகிறார். இடையில் தயாரிப்பாளர்களின் நிலைமை தான் பரிதாபம்.

சரி இதற்காக விஜய்சேதுபதியை ரசிகர்கள் திட்டுகிறார்கள் என்று கேட்டால் இல்லை. அது மேட்டரே வேற. விஜய்சேதுபதி கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் மத்திய அரசு தேசிய விருது கொடுத்தால் வாங்குவீர்களா என்று கேட்டுள்ளனர். அதற்கு இப்போதுதான் நீட் தேர்வில் ஒரு உயிரை கொடுத்துள்ளோம் அது மட்டுமில்லாமல் இந்தி திணிப்பு என ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கின்றன.

vijay-sethupathi
vijay-sethupathi

இந்த நேரத்தில் தேசிய விருது கொடுத்தால் சத்தியமாக வாங்க மாட்டேன் என மொத்த மீடியா முன்பும் சத்தியம் செய்து இருந்தார் விஜய் சேதுபதி. ஆனால் இப்போது கூச்சமே இல்லாமல் விருது வாங்கிட்டு வரீங்களா என ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு ஆகிவிட்டார். நீட் தேர்வு பிரச்சனை அப்போ வாங்க மாட்டேன் என்று சொன்னாலும் இன்றுவரை நீட்தேர்வு பிரச்சனை தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

அது மட்டுமில்லாமல் மத்தியிலும் ஆட்சி மாறியதாக தெரியவில்லை. இப்படி இருக்கையில் எப்படி அந்த விருதை வாங்கும் உங்களுக்கு மனம் வந்தது என ரசிகர்கள் இணையதளங்களின் வச்சு செய்து வருகின்றனர். மேலும் அது வேற வாய் இது நாற வாய் என வடிவேலு காமெடியை வைத்து விஜய்சேதுபதியை வந்த வண்டியாக கலாய்த்து வருவதுமதிப்பை குறைத்து வருகிறது என்றே சொல்லலாம். சீக்கிரம் இதற்கு ஒரு விளக்கம் கொடுத்து பிரச்சனைக்கு முடிவு கட்டுங்கள் விஜய்சேதுபதி.

Trending News