வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

வெற்றிமாறன் – விஜய்சேதுபதி இடையே மோதல்? என்ன செய்யப்போகிறார் சூரி

வடசென்னை அசுரன் படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது வெற்றிமாறன் இயக்கி வரும் படம் விடுதலை. முதன் முறையாக காமெடி நடிகர் சூரியை கதாநாயகனாக வைத்து படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். படத்தில் விஜய்சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

முன்னதாக படத்தின் பெரும்பாலான பகுதிகள் சத்தியமங்கலம் வனப் பகுதிகளில் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டு விட்டது. தற்போது இறுதிகட்ட படப்பிடிப்புகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் அடர்ந்த வனப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. படத்தை பேன் இந்தியா திரைப்படமாக ரிலீஸ் செய்யலாம் என தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளாராம். இதனால் 5 மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகலாம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படப்பிடிப்பின் போது விஜய் சேதுபதி தேவையில்லாமல் வெற்றிமாறனின் பணிகளில் குறுக்கிட்டதாகவும், அதனால் இருவருக்கும் இடையே மோதல் எழுந்ததாகவும் சொல்லப்படுகிறது. தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக விஜய் சேதுபதி வலம் வந்து கொண்டிருக்கிறார்.

vijaysethupathi-cinemapettai
vijaysethupathi-cinemapettai

அவரது கைவசம் ஏகப்பட்ட படங்கள் உள்ளது. எனவே விடுதலை படத்தில் விஜய்சேதுபதி இணைந்ததும் படத்திற்கான மார்க்கெட் எகிறி உள்ளதால்தான், மற்ற இயக்குனர்களிடம் நடந்து கொள்வது போல விஜய் சேதுபதி வெற்றிமாறனிடம் தனது வேலையைக் காட்டி வருகிறார் என திரையுலகினர் கிசுகிசுத்து வருகின்றனர்.

Trending News