வெள்ளிக்கிழமை, டிசம்பர் 20, 2024

2024 பாக்ஸ் ஆபிஸ் ஹிட் வரிசையில் இணையுமா விடுதலை 2.? முதல் நாள் வசூல் கணிப்பு எவ்வளவு.?

Viduthalai 2: வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி கூட்டணியில் உருவாகியுள்ள விடுதலை 2 இன்று வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே முதல் பாகம் ரசிகர்களை கவர்ந்து வசூல் லாபம் பார்த்தது.

அதைத்தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது. இதற்கு முக்கிய காரணம் விஜய் சேதுபதி தான் என்பதை சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

முதல் பாகத்தில் பெருமாள் வாத்தியாராக வந்த இவரின் முழு கதை இந்த பாகத்தில் தான் காட்டப்பட இருக்கிறது. அதிலும் ட்ரைலரில் இடம் பெற்ற காட்சிகளும் வசனங்களும் அனல் பறந்தது.

அதைத்தொடர்ந்து ரிலீசுக்கு முந்தைய நாள் வரை வெற்றிமாறன் விறுவிறுப்பாக வேலை பார்த்தார். படகுழுவினர் ஒரு பக்கம் தீயாக ப்ரமோஷன் செய்து வந்தனர்.

முதல் நாள் வசூல் கணிப்பு

அதற்கு தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளது. படத்தை பார்த்தால் அனைவரும் விஜய் சேதுபதியை ஆகா ஓகோ என்று புகழ்ந்து வருகின்றனர்.

அதேபோல் வெற்றிமாறனுக்கு இன்னொரு தேசிய விருது பார்சல் என குதூகளித்து வருகின்றனர். இப்படியாக நல்ல ஓப்பனிங்கை பெற்றுள்ள விடுதலை 2 முதல் நாள் வசூல் நிலவரம் பற்றி காண்போம்.

முதல் பாகத்தை பொருத்தவரை இந்திய அளவில் ஒட்டுமொத்தமாக 43 கோடிகளை வசூலித்திருந்தது. அதேபோல் உலக அளவில் 55 கோடியை நெருங்கி இருந்தது.

அந்த வகையில் இரண்டாம் பாகத்தின் டிக்கெட் புக்கிங் 3 கோடியை நெருங்கி உள்ளது. மேலும் தமிழக அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுத்துள்ளது.

இதனால் மாலை மற்றும் இரவு காட்சிகளில் ரசிகர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என தெரிகிறது. அதை வைத்து பார்க்கும் போது விடுதலை 2 முதல் நாள் வசூல் மட்டுமே 4 கோடியை நெருங்கும் என்கின்றனர்.

அதேபோல் இந்த வருடத்தின் வெற்றி பட வரிசையில் இப்படமும் இணைந்து விடும். ஏற்கனவே விஜய் சேதுபதிக்கு மகாராஜா பெரும் வெற்றியை கொடுத்துள்ளது. அதில் விடுதலை 2 படமும் இணைய வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Trending News