செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

வன்முறை எங்க மொழி இல்ல ஆனா அதையும் பேசுவோம்.. வெளியானது விடுதலை 2 ட்ரெய்லர்

Vidurhalai 2 Trailer: வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த வருடம் விடுதலை படம் வெளியாகி கவனம் பெற்றது. அதை அடுத்து இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

சூரி கதையின் நாயகனாக நடிக்க விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், அனுராக் காஷ்யப், பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இதன் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக ரசிகர்கள் காலையிலிருந்து ஆவலுடன் காத்திருந்தனர். அவர்களை அதிக நேரம் காக்க வைக்காமல் தற்போது ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. இதில் விஜய் சேதுபதி அதாவது பெருமாள் வாத்தியாரின் ஃப்ளாஷ்பேக் நிகழ்வுகள் தான் காட்டப்படுகிறது.

வெளியானது விஜய் சேதுபதியின் விடுதலை 2 ட்ரைலர்

அவர் எப்படி போராளியாக மாறினார். ஆதிக்க வர்க்கத்தினரை எதிர்த்து போராடும் மக்களின் நிலை என்ன என்பது காட்டப்படுகிறது. இதற்கிடையில் மஞ்சு வாரியருடன் காதல், போராட்டம் என விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் வலுவாக காட்டப்பட்டுள்ளது.

அதேபோல் வன்முறை எங்களின் மொழி கிடையாது. தேவைப்பட்டால் அதையும் பேசுவோம். தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களைத்தான் உருவாக்குவாங்க. அது முன்னேற்றத்திற்கு வழி வகுக்காது போன்ற வசனங்களும் தீயாக உள்ளது.

இப்படியாக வெளிவந்துள்ள ட்ரெய்லர் தற்போது வைரலாகி வருகிறது. அதே போல் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாக இருக்கும் படத்தை காணவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Trending News