சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

பேச்சுக்கு சொல்லாமல் செய்து காட்டிய விஜய் சேதுபதி.. மெய்சிலிர்க்க வைத்த உதவி

Actor VijaySethupathi: பன்முகத் திறமை கொண்டு தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் விஜய் சேதுபதி. சப்போர்ட்டிங் ஆக்டர் ஆக பணிபுரிந்து, அதன் பின் ஹீரோவாக மாறி மக்களின் செல்வனான இவர் மேற்கொண்ட தெய்வகுணம் பொருந்திய சம்பவம் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இவர் நகைச்சுவை உணர்வோடு மேற்கொண்ட படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது பல பரிமாணத்திலும் தன்னை நிரூபித்து வருகிறார். மேலும் அடுத்தடுத்த படங்களில் கால்ஷீட் கொடுத்து படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார்.

Also Read: விக்ரம் பிரபுவுக்கு வெளிச்சம் காட்டியதா பாயும் ஓளி நீ எனக்கு.. அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

அவ்வாறு ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த படம் தான் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன். இப்பட பிடிப்பின் பூஜை மலேசியாவில் போடப்பட்டது. அதைத்தொடர்ந்து விஜய் சேதுபதியை காண தமிழ் வாழ் ரசிகர்கள் படையெடுத்து அணுகி உள்ளனர்.

அதில் ஒரு பெண்மணி இவரைப் பார்த்து தயங்கியவாறு நின்று இருந்தாராம். பலரும் சுற்றி செல்ஃபி எடுத்துக் கொண்டு, தன் படப்பிடிப்பையும் கவனித்து வந்த விஜய் சேதுபதி பெண்மணியின் சோகத்தையும் கவனித்துள்ளார். அவரை தனியாக அழைத்து என்ன பிரச்சனை என்னிடம் சொல்லுங்கள் என்று கேட்க தொடங்கி உள்ளார் விஜய் சேதுபதி.

Also Read: பொன்னியின் செல்வன் ரேஞ்சுக்கு கொடுத்த பில்டப்.. டாப் ஹீரோக்களால் பழைய கதையை உருட்டும் சுந்தர் சி

அதற்கு அந்த பெண்மணி தான் வீட்டு வேலைக்காக மலேசியா வந்ததாகவும், அதன் பின் சரிவர சம்பளம் இல்லாததால் தான் வந்த கம்பெனியில் இருந்து துரத்தி அடிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து போலீசுக்கு பயந்து மறைந்து வாழ்வதாகவும் கூறினார்.

மேலும் தற்போதைக்கு என்னால் தமிழ்நாடு செல்வதற்கு கூட பணம் இல்லை எனவும் கூறியுள்ளார். அவரின் கதையை கேட்டு மலேசியா இமிகிரேஷன் ஆபீஸில், இதை குறித்து பேசி, மேற்கொண்டு தன் பணத்தில் செலவு செய்து அப்பெண்மணிக்கு உதவியுள்ளார். மேலும் தேவையான பணத்தை கொடுத்து தமிழ்நாட்டிற்கு டிக்கெட் எடுத்து அனுப்பி வைத்துள்ளார் விஜய் சேதுபதி. இத்தகைய சம்பவம் இவர் கடந்து வந்த பாதையை நினைவு கொள்ளச் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

Also Read: சாதிய வெறியை தூண்டியதா தேவர் மகன்.. சாமர்த்தியமாக காய் நகர்த்திய இயக்குனருக்கு கமலின் சவுக்கடி

Trending News