வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஜவ்வாக இழுக்கும் இயக்குனர்.. உங்க சவகாசம் வேண்டாம் என எஸ்கேப் ஆன விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி தற்போது வெற்றிமாறனின் விடுதலை படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து பாலிவுட்டில் காந்தி டாக்கீஸ், மெர்ரி கிறிஸ்மஸ், ஜவான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் பல வருடங்களுக்கு முன்பே விஜய் சேதுபதி நடிப்பில் உருவான இடம்பொருள் ஏவல் படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

ஏற்கனவே வினோத் துணிவு படத்தை முடித்த கையோடு விஜய் சேதுபதி படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் துணிவு. இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார்.

Also Read :வேதாவை மிஞ்சும் கேங்ஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் மேனன்.. மைக்கேல் டீசர் விமர்சனம்

ஆரம்பத்தில் சுறுசுறுப்பாக போன துணிவு படத்தின் படப்பிடிப்பு தற்போது மந்தமாகச் செல்கிறது. அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணிவு படம் வெளியாக உள்ளதாக கூறப்பட்ட நிலையில் படப்பிடிப்பு மெத்தனமாக தான் செல்கிறது.

வினோத் துணிவு படத்தையே ஜவ்வாக இழுத்து வருகிறார். இந்நிலையில் வினோத்தை நம்பினால் வேலைக்காகாது என்று உங்க சவகாசமே வேண்டாம் என்று எஸ்கேப் ஆகி உள்ளார் விஜய் சேதுபதி. தற்போது புதிய இயக்குனர் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

Also Read :முதிர்ந்த வயதில் சினிமாவில் அறிமுகமான 5 நட்சத்திரங்கள்.. ஆல்-ரவுண்டராக அசால்ட் காட்டும் விஜய் சேதுபதி

அதாவது விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் நடிப்பில் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என்ற படத்தை இயக்கியவர் ஆறுமுகக்குமார். இவருடைய இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளாராம். இந்த படத்தில் வடிவேலுவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

இதனால் மிக விரைவில் வடிவேலு மற்றும் விஜய் சேதுபதி ஒரே திரையில் காணலாம். மேலும் துணிவு படத்தால் வினோத்துக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. பெரிய ஹீரோக்களின் படங்களை இயக்கும் வாய்ப்பை தவறவிட்ட வருகிறார்.

Also Read :7 வருடங்களாக கிடப்பில் இருக்கும் விஜய் சேதுபதியின் திரைப்படம்.. ரிலீஸை உறுதி செய்த இயக்குனர்

Trending News