ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

பெயரை கெடுத்துக் கொண்ட இயக்குனருக்கு 4 படங்களா.? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் சேதுபதி

தற்போது கோலிவுட்டில் படு பிசியான நடிகர் விஜய் சேதுபதி. எல்லா படங்களுக்கும் கால்ஷீட் கொடுத்து நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் படத்தில் கமல்ஹாசனுக்கு எதிராக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படம் வருகிற ஜூலை 3ஆம் தேதி வெளியாக உள்ளது. இது தவிர பாலிவுட்டிலும் பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் பிரபல இயக்குனர் ஒருவருக்கு விஜய்சேதுபதி நான்கு படங்களை நடித்து தருவதாக சொல்லியிருக்கிறாராம். ஏனென்றால் அந்த நான்கு கதைகளும் விஜய்சேதுபதிக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டதாம்.

இதனால் தொடர்ந்து அடுத்த அடுத்ததாக அந்த நான்கு படங்களிலும் நடிக்க இருக்கிறாராம். ஆனால் அந்த இயக்குனர் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். அதாவது பிரபல நடிகர் ஒருவருடன் சண்டையிட்டு மேடையிலேயே அவமரியாதையாக பேசுகிறார்.

அவர் வேறு யாரும் இல்லை இயக்குனர் மிஸ்கின் தான். இவருடைய இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் விஷால் கதாநாயகனாக நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் முயற்சியில் இறங்கி போது விஷால், மிஸ்கின் இருவருக்கும் இடையே சண்டை முற்றிவிட்டது.

அதன் பிறகு துப்பறிவாளன் படத்தை விஷாலே இயக்கும் முயற்சியில் ஈடுபட்டார். மேலும் மிஸ்கின் சில பட விழாவில் கலந்து கொள்ளும் போதும் அவமரியாதையாக பேசுவார். இதனால் பல சர்ச்சைகளும் வந்துள்ளது. தற்போது மிஸ்கின் மியூசிக் டைரக்டர் என்ற அவதாரமும் எடுத்துள்ளார்.

இந்நிலையில் பல நடிகரும் இவர் இயக்கத்தில் நடிக்க மறுத்து வருகின்றனர். ஆனால் விஜய் சேதுபதி அவருக்கு நான்கு படங்கள் கொடுத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தற்போது இந்த செய்திதான் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Trending News