வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

வெற்றிமாறனை கண்கலங்க வைத்த விஜய் சேதுபதி.. விடுதலை 2 படப்பிடிப்பில் நடந்தது என்ன.?

Vijay Sethupathi: வெற்றிமாறன், விஜய் சேதுபதி கூட்டணியின் விடுதலை 2 டிசம்பர் 20 வெளியாகிறது. சூரி, மஞ்சு வாரியார், அனுராக் காஷ்யப் என பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

ஏற்கனவே முதல் பாகம் வெற்றியடைந்த நிலையில் இரண்டாம் பாகத்தை இயக்குனர் பார்த்து பார்த்து செதுக்கி வந்தார். சில காட்சிகளை திரும்பவும் படமாக்கியதாலேயே இதன் ரிலீஸ் இவ்வளவு நாள் தாமதமாகி வந்தது.

தற்போது ஒரு வழியாக ரிலீஸ் தேதியை பட குழு லாக் செய்த நிலையில் விரைவில் ட்ரெய்லர் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் விஜய் சேதுபதியால் வெற்றிமாறன் கண்கலங்கிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

விஜய் சேதுபதியால் கண் கலங்கிய வெற்றிமாறன்

நீண்ட நாட்களாக இழுத்து வந்த படத்தின் படப்பிடிப்பை வெற்றிமாறன் சமீபத்தில் முடித்துள்ளார். தயாரிப்பாளருக்கு கூட அறிவிக்காமல் திடுதிப்புன்னு அவர் பூசணிக்காய் உடைத்த கதை தான் கோலிவுட்டில் சலசலக்கப்பட்டு வருகிறது.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கும் மேலாக படப்பிடிப்பு வந்த நிலையில் கடைசி நாள் அன்று அனைவரும் ரொம்பவும் எமோஷனலாக இருந்திருக்கின்றனர். அப்போது உதவி இயக்குனர்கள் உட்பட எல்லோரிடமும் மைக்கை கொடுத்து வெற்றிமாறன் பேச சொல்லிவிட்டாராம்.

அவர்கள் நெகிழ்ச்சியான தருணங்களை கூறி உணர்ச்சிவசப்பட்டு இருக்கின்றனர். அப்போது விஜய் சேதுபதியும் மைக்கை வாங்கி கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்கும் மேலாக பேசியிருக்கிறார். இதனால் அங்கு இருந்தவர்கள் அனைவரும் நெகிழ்ந்து போய் இருக்கின்றனர்.

அதிலும் வெற்றிமாறன் அப்படியே கண் கலங்கி விட்டாராம். இப்படியாக விடுதலை இரண்டு பாகங்களின் பயணம் அவர்களுக்கு மறக்க முடியாததாக இருந்திருக்கிறது.

Trending News