வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சின்ன கல்லு பெத்த லாபம் அடிக்கும் விஜய் சேதுபதி.. வெறும் 20 நாட்களுக்கு இவ்வளவு கோடிகளா!

விஜய் சேதுபதி வருடத்திற்கு 10 முதல் 15 படங்கள் நடித்துக் கொண்டிருந்த நிலையில் இப்போது நல்ல கதை அம்சம் உள்ள படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதுவும் ஒரு பக்கம் ஹீரோ மற்றொரு பக்கம் வில்லன் என மாறி மாறி நடித்து வருகிறார். இப்போது பாலிவுட்டிலேயே கைவசம் இரண்டு படங்கள் வைத்திருக்கிறார்.

அதன்படி ஷாருக்கானுக்கு வில்லனாக ஜவான் படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் ரிலீசுக்கு வர உள்ள நிலையில் அடுத்ததாக விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே விஜய் சேதுபதிக்கு மிகவும் பரிச்சயமான இயக்குனருடன் தான் மீண்டும் கைகோர்க்க இருக்கிறார்.

Also Read: அடுத்த ஹிட்க்கு தயாரான மோட்டார் மோகன்.. பெங்களூர் தக்காளியுடன் படப்பிடிப்பை தொடங்கி விஜய் சேதுபதி

அதாவது காக்கா முட்டை படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்றவர் தான் இயக்குனர் மணிகண்டன். இப்படத்திற்காக இவர் தேசிய விருதும் வாங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் விஜய் சேதுபதியின் ஆண்டவன் கட்டளை மற்றும் கடைசி விவசாயி ஆகிய படங்களை மணிகண்டன் இயக்கி இருந்தார்.

இப்போது மீண்டும் நண்பனுக்காக மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். அதாவது ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனம் வெப் சீரிஸ் ஒன்றை எடுக்க இருக்கிறார்கள். அந்த வெப் சீரிஸில் தான் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். ஏற்கனவே இதற்கான பூஜை போடப்பட்டிருக்கிறது.

Also Read: முத்தையா போனதால் முதல்வரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கும் விஜய் சேதுபதி.. உறுதியான வித்தியாசமான டைட்டில்

இந்நிலையில் விரைவில் இந்த வெப்சீரிஸின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இதில் விஜய் சேதுபதியின் சம்பளம் தான் அனைவரையும் வாயடைக்க செய்யும் விதமாக இருக்கிறது. அதாவது உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் விஜய், ரஜினி கூட இந்த அளவுக்கு சம்பளம் பெறுவார்களா என்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது.

ஹாட் ஸ்டார் வெப் சீரிஸ்க்கு ஒரு நாளைக்கு விஜய் சேதுபதி ஒரு கோடி சம்பளம் பெறுகிறாராம். இவருக்கு 20 நாட்கள் கால்சீட் கொடுக்கப்பட்ட நிலையில் 20 கோடி சம்பளமாக பேசப்பட்டிருக்கிறது. இதன் மூலம் சின்ன கல்லில் பெத்த லாபம் பார்த்திருக்கிறார் விஜய் சேதுபதி. ஆகையால் படங்களிலும் இனி விஜய் சேதுபதியின் சம்பளம் உயர வாய்ப்பு இருக்கிறது என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர்.

Also Read: 15 நாள் ஷூட்டிங்னு சொல்லிட்டு மாச கணக்குல போகுதே.. தப்பிக்க முடியாமல் திணறும் விஜய் சேதுபதி

Trending News