Vijay Sethupathi: எந்த இடத்தில பொருளை தொலைச்சோமோ அங்க தேடுனதா அந்த பொருள் கிடைக்கும் என்று சொல்வதற்கு ஏற்ப விஜய் சேதுபதி ஹீரோ இமேஜை விட்டு வில்லனாக மாறிய நிலையில் தற்போது அந்த ஹீரோ இமேஜை தக்க வைத்துக்கொள்ள மறுபடியும் புதிதாக அவதாரம் எடுத்திருக்கிறார். அந்த வகையில் கடந்த வாரம் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் 50வது படமாக மகாராஜா படம் அனைத்து திரையரங்களிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு வருகிறது.
இப்படத்தின் பட்ஜெட் 20 கோடியில் எடுக்கப்பட்ட நிலையில் தற்போது ஐந்து நாள் வசூலாக 32 கோடி வரை தொட்டிருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் இப்படத்தின் வசூல் சுமார் 50 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வில்லன் கேரக்டருக்கு நோ சொன்ன விஜய் சேதுபதி
ஆனால் இதற்கு முன்னதாக நடித்த மெர்ரி கிறிஸ்மஸ், மும்பை கார், யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற படங்கள் அனைத்தும் வந்த சுவடு தெரியாமல் தோல்வியே சந்தித்தது. அந்த வகையில் கடந்த வருடம் வெற்றிமாறன் இயக்கத்தில் வாத்தியார் என்ற பெருமாள் கேரக்டருடன் வெளிவந்த விடுதலை படம் மட்டும் விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது என்று சொல்லலாம்.
அதனால் எப்படியாவது ஹீரோ இமேஜை விட்டு விடக்கூடாது என்ற நிலைமைக்கு விஜய் சேதுபதி வந்து விட்டார். அந்த வகையில் மகாராஜா படத்தில் ஹீரோவாக நடிப்பதற்கு கம்மியான சம்பளமாக இருந்தால் கூட பரவாயில்லை என்று 20 கோடி சம்பளத்தை மட்டுமே வாங்கி நடித்து கொடுத்திருக்கிறார். ஆனால் இதற்கு முன்னதாக நடித்த படங்களில் 25 கோடி முதல் 30 கோடி வரை சம்பளம் வாங்கி இருக்கிறார்.
அந்த வகையில் வில்லனாக நடித்த ஜவான் படத்திலும் 25 கோடி ரூபாய் வாங்கி இருக்கிறார். இதை தாண்டி இப்படத்தில் இருந்து வந்த வசூலிலும் இவருக்கு ஷேர் இருக்கலாம் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அப்படி இருக்கும் பொழுது ஹீரோவாக நடித்த மகாராஜா படத்தில் மட்டும் கம்மியான சம்பளமாக 20 கோடியில் நடித்திருக்கிறார் என்றால் எப்படியாவது ஹீரோவாக நடித்து விட்ட மார்க்கெட்டை பிடித்து விட வேண்டும் என்பதற்காகத் தான்.
இதனைத் தொடர்ந்து விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பிறகு இனி ஹீரோவாக தான் விஜய் சேதுபதி நடிப்பதற்கு சம்மதம் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் வில்லன் கேரக்டருக்கு நோ சொல்லிவிட்டார்.
ஹீரோ இமேஜை தக்க வைக்க போராடும் விஜய் சேதுபதி
- Vijay Sethupathi: ஒரே ஒரு வெற்றிக்காக போராடும் விஜய் சேதுபதியின் 51வது பட போஸ்டர்
- 800 படங்களுடன் நெட்பிளிக்ஸ், அமேசானுக்கு ஆட்டம் காட்ட செய்த சூட்சமம்
- விஜய் சேதுபதி இப்படி செய்வாருன்னு நினைக்கவே இல்ல