புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வாய்ப்புக்காக கமல் கெட்டப்பை பயன்படுத்திய விஜய் சேதுபதி.. உலக நாயகனுக்கு கொடுத்த டஃப்

Vijay Sethupathi used Kamal getup for opportunity: வாய்ப்புக்காக எங்கோ அலைஞ்சு திரிஞ்ச கொண்டிருந்த விஜய் சேதுபதி சினிமாவிற்குள் நுழைந்த பொழுது ஏறாத கம்பெனியே இல்லை. பலரிடமும் கெஞ்சி மிகவும் கஷ்டப்பட்டு இவருடைய திரை பயணத்தை ஆரம்பித்து தற்போது அசைக்க முடியாத இடத்தை அடைந்திருக்கிறார்.

அப்படிப்பட்ட இவர் ஆரம்பத்தில் யார் என்று தெரியாத நேரத்திலேயே நிறைய படங்களில் நடித்திருக்கிறார். புதுப்பேட்டை, லீ, வெண்ணிலா கபடி குழு, நான் சிகப்பு மனிதன் போன்ற பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தின் மூலம் இவருடைய முகத்தை காட்டியிருக்கிறார். ஏனென்றால் வாய்ப்புக்காக காத்திருந்த நேரத்தில் இப்படிப்பட்ட ஒரு சில வாய்ப்புகள் மட்டுமே இவருக்கு கிடைத்தது.

ஆனாலும் ஏதோ ஒரு நம்பிக்கை வைத்து கிடைத்த வாய்ப்புகள் மூலம் தொடர்ந்து தலையைக் காட்டி வந்தார். அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக பரிச்சயம் ஆகும் பொழுது கமல் கெட்டப்பை போட்டு தான் சுத்தி இருக்கிறார். அந்த கெட்டப்பில் விஜய் சேதுபதியை பார்க்கும் பொழுது சத்தியா படத்தில் கமலை பார்ப்பது போல் இருக்கிறது.

Also read: தப்பு கணக்கு போட்ட விஜய் சேதுபதி.. தெளிவில்லாமல் எடுத்த முடிவால் இழந்த பழக்கவழக்கம்

பெரும்பாலும் சினிமாவிற்குள் வரவேண்டும் என்று ஆசைப்பட்டு நுழைந்தவர்கள் அனைவரும் ரோல் மாடலாக பல நடிகர்களை கூறுவது வழக்கம். அதுபோல விஜய் சேதுபதிக்கு மிகவும் பிடித்தமான ரோல் மாடலாக நினைத்தது கமலைத் தான். அதனால் அவருடைய கெட்டப்பை போட்டு தான் முக்கால்வாசி அலைந்திருக்கிறார். அதனாலேயே என்னமோ தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் இவருடைய திறமையை காட்டி நிரூபித்து வருகிறார்.

அத்துடன் கமலை போலவே கமர்சியல் படங்களை கொடுப்பதை காட்டிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதிலும் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று இல்லாமல் அனைத்து விதமான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து இவருக்கு என்று ஒரு தனித்துவமான இடத்தை ரசிகர்கள் மத்தியில் பதித்து விட்டார். அப்படிப்பட்ட இவருடைய நடிப்பை தற்போது கமல் பார்த்து வியக்கும் அளவிற்கு இருக்கிறது.

vijay sethupathi get up as like kamal
vijay sethupathi get up as like kamal

Also read: ஹீரோயின் ஓகே சொல்லியும் லிப்லாக்குக்கு நோ சொன்ன 5 ஹீரோக்கள்.. திரிஷாவிடம் விஜய் சேதுபதி கூறிய லாஜிக்

Trending News