கெத்து காட்ட நினைத்த விஜய் சேதுபதி.. கடைசியில் மொத்தமாய் போன பரிதாபம்

விஜய் சேதுபதி இப்போது பல படங்களை கைவசம் வைத்துள்ள நிலையில் சமீபத்தில் அவரது நடிப்பில் டிஎஸ்பி படம் வெளியானது. பொன்ராம் இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு படுமோசமான விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ஆனால் படம் வெளியான ஒரு நாளிலேயே வெற்றி விழா கொண்டாடினர் படக் குழுவினர்.

இது இணையத்தில் கேலிக்கூத்துக்கு உள்ளானது. இந்நிலையில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் லவ் டுடே. பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்திருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்த வருகிறது.

Also Read : தனுஷ்க்கு மட்டும் தான் நோ.. விஜய் சேதுபதி படம்னா டபுள் ஓகே சொல்லும் பாலிவுட் வாரிசு நடிகை

தமிழ்நாட்டில் மட்டும் லவ் டுடே படத்தால் தயாரிப்பாளர்களுக்கு 30 கோடிக்கு மேல் ஷேர் வந்துள்ளது. இப்படத்தின் வரவேற்பை பார்த்து தெலுங்கில் இப்படம் டப் செய்து வெளியானது. அங்கும் வெற்றி பெற்ற நிலையில் இப்போது ஹிந்தியில் லவ் டுடே படம் எடுக்கப்பட உள்ளது.

அதில் பிரதீப் ரங்கநாதன் நடிக்காமல் படத்தை மட்டும் இயக்கவிருக்கிறார். இப்போது லவ் டுடே படம் ஓடிடியில் வெளியானாலும் இன்னும் திரையரங்குகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் லவ் டுடே படத்தின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட வேண்டும் என விஜய் சேதுபதி தன்னுடைய டிஎஸ்பி படத்தை வெளியிட்டு கெடுத்து காட்ட நினைத்தார்.

Also Read : வர வர செட்டே ஆகாத ஹீரோயிஸம்.. தொடர் நடிப்பால் விஜய் சேதுபதிக்கு வந்த வினை

ஆனால் நடந்ததோ அப்படியே உல்டாவாகிவிட்டது. டிஎஸ்பி படத்திற்கு போட்டியாக சசிகுமாரின் காரி, விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி ஆகிய படங்கள் வெளியானது. இதில் கட்டா குஸ்தி படம் கூட வசூல் வேட்டையாடி வருகிறது. ஆனால் டிஎஸ்பி படம் வெளியாகும் தியேட்டர்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியின் படத்திற்கு இந்த நிலைமையா என பலரும் ஆச்சரியப்படுகின்றனர். மேலும் டி எஸ் பி படத்தினால் திரையரங்குகளுக்கு நஷ்டம் தான் ஏற்படும் என்பதால் சில தியேட்டர்களில் இப்படத்தை தூக்கிவிட்டு லவ் டுடே மற்றும் கட்டா குஸ்தி போன்ற படங்களை திரையிட்டு வருகிறார்கள்.

Also Read : சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதியால் மோசம் போன இயக்குனர்.. மொத்த தப்பையும் இப்படி என் தலையில இறக்கிட்டீங்களே!