செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

குண்டு சட்டியில் குதிரை ஓட்ட முடியாது.. தேடி வந்தவர்களை துரத்தி விடும் விஜய் சேதுபதி

Actor Vijay Sethupathy: இப்போது பிசியாக இருக்கும் நடிகர் யார் என்று கேட்டால் விஜய் சேதுபதி என்று சொல்லும் அளவுக்கு அவர் நேரம் காலம் பார்க்காமல் நடித்து வருகிறார். இருப்பினும் அவரைத் தேடி பல பட வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அவர் தன்னை தேடி வந்த வாய்ப்புகளை எல்லாம் வேண்டாம் என்று உதறி தள்ளுகிறாராம்.

இதுதான் இப்போது பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. விசாரித்துப் பார்த்ததில் விஜய் சேதுபதி தற்போது புது முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். அதாவது இனிமேல் குண்டு சட்டியில் குதிரை ஓட்ட முடியாது, என் ரேஞ்சே வேற என்னும் அளவுக்கு அவர் மாஸ்டர் பிளான் ஒன்றை போட்டு இருக்கிறார்.

Also read: மிஷ்கின் சொன்னால் குட்டி போட்ட பூனை போல் பின்னால் வரும் விஜய் சேதுபதி.. மாவீரனில் செய்த உதவி

என்னதான் அவர் ஹீரோவாக பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தாலும் வில்லன் வாய்ப்புகள் தான் அவரை உச்சாணி கொம்புக்கு கொண்டு சென்றிருக்கிறது. அதனாலேயே அவர் அடுத்தடுத்து வில்லன் கேரக்டரை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் அது போன்ற வாய்ப்புகள் தான் அவரை அதிகம் தேடி வருகிறதாம்.

அதனால் சகட்டு மேனிக்கு அந்த வாய்ப்புகளை எல்லாம் ஒப்புக்கொண்டு அட்வான்சை வாங்கி வரும் அவர் ஹீரோ கேரக்டர் வந்தால் நோ சொல்லி விடுகிறாராம். யாராவது ஹீரோ கேரக்டருக்கு கதை சொல்ல வந்தால் சம்பளம் அதிகமாக வேண்டும் என உப்பு சப்பில்லாத காரணத்தை கூறி அவர்களை துரத்தி விடுகிறாராம்.

Also read: உயிரோடு இருக்கும் வரை தான் மரியாதை, இறந்த பிறகு கண்டுக்காத சூர்யா.. ஓடோடி வந்த விஜய் சேதுபதி

இதுதான் இப்போது கோடம்பாக்க வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் தற்போது ஜவான் படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் சேதுபதி அடுத்ததாக இந்தியா முழுவதிலும் உள்ள மொழி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம்.

இந்த தைரியமும், நம்பிக்கையையும் அவருக்கு ஜவான் படம் கொடுத்திருக்கிறது. படம் மட்டும் வெளிவந்தால் இவருடைய மார்க்கெட் உயர்வது மட்டுமல்லாமல் வில்லன் கதாபாத்திரங்கள் வரிசை கட்டி நிற்கும் என்றும் கூறப்படுகிறது. இப்படி இருக்கும் போது கிணற்றுத் தவளையாக எதற்கு இருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ள விஜய் சேதுபதி தன் திறமையை இந்தியா முழுவதும் பரப்ப திட்டம் போட்டுள்ளார்.

Also read: ஹீரோவைவிட வில்லன்களை பெரிதும் பேசப்பட்ட 5 படங்கள்.. கடைசி வரை நின்று அடித்த விஜய் சேதுபதி

Trending News