வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சூப்பர் ஸ்டாருடன் இணையும் விஜய் சேதுபதி.. வேற லெவல் காம்போவில் உருவாகும் படம்

விஜய் சேதுபதி தன்னுடைய படத்தில் மற்ற ஹீரோக்கள் நடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லாமல் டாப் ஹீரோக்களின் படங்களில் கொஞ்சமும் தயக்கம் காட்டாமல் நடித்து வருகிறார். அவருடைய ஆஸ்தான இயக்குனர் சீனு ராமசாமி கூட ஒரு பேட்டியில் இதுகுறித்து பேசி இருந்தார்.

அதாவது மற்ற ஹீரோக்களின் படங்களில் நடித்தால் விஜய் சேதுபதியின் மார்க்கெட் குறையும் என்று அவர் கூறியிருந்தார். ஆனால் அதற்கு நேர் எதிராக விஜய் சேதுபதி தொடர்ந்து டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்த தனது அந்தஸ்தை அதிகப்படுத்தி வருகிறார்.

Also Read : இந்த வருஷம் வேண்டாம், அடுத்த வருஷம் பார்த்துக்கலாம்.. விஜய் சேதுபதியின் பாலிவுட் கனவை சுக்குநூறாக்கய நடிகர்

பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகவும், இதைத்தொடர்ந்து மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக பவானி என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி மிரட்டி இருந்தார். கடைசியாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் கேரக்டர் பலராலும் பாராட்டப்பட்டது.

தற்போது பாலிவுட்டில் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்து வருகிறார். இந்த சூழலில் மீண்டும் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் ஒரு படத்தில் இணைய உள்ளார். இந்தப் படத்தை காக்கா முட்டை படத்தின் இயக்குனர் மணிகண்டன் இயக்க உள்ளார்.

Also Read : கமலின் இடத்தை பிடிக்க விஜய் சேதுபதி போட்ட ஸ்கெட்ச்.. 35 வருடத்திற்கு முன் வெளிவந்த படத்தை கையில் எடுக்கிறார்

இப்படத்தின் சூட்டிங் இந்த மாதத்திலேயே தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படம் நேரடியாக டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு தொடர்ந்து விஜய் சேதுபதி மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர் மற்றும் காந்தி டாக்கீஸ் படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளது. இப்போது வெற்றிமாறனின் விடுதலை நடித்த முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ஒரு படத்திலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

Also Read : ஜவ்வாக இழுக்கும் இயக்குனர்.. உங்க சவகாசம் வேண்டாம் என எஸ்கேப் ஆன விஜய் சேதுபதி

Trending News