Vijay Sethupathi won in 5 different roles: ஒரு நடிகர் என்றால் ஹீரோவாக தான் நடிக்கணும் என்று வரைமுறை இல்லாமல் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் ரசிக்கும்படி நடித்து கைதட்டல்களை வாங்கி விடுவோம் என்று சில நடிகர்கள் தான் நடித்துக் கொண்டு வருகிறார்கள். இதற்கு உதாரணமாக விஜய் சேதுபதியையும் சொல்லலாம். ஆரம்பத்தில் கிடைத்த சிறு சிறு கதாபாத்திரங்களை சரிவர செய்து கொஞ்சம் கொஞ்சமாக ஹீரோ அவதாரம் எடுத்தார்.
வித்தியாசமான கேரக்டரில் நடித்து வந்த விஜய் சேதுபதி
இதனை தொடர்ந்து வில்லனாகவும் மிரட்டல்லான நடிப்பை கொடுத்து வில்லன் ரேஞ்சுக்கும் வளர்ந்து வந்தார். ஆனால் இதனால் ஹீரோ இமேஜ் பாதிக்கப்படுகிறது என்று தெரிந்ததும் கொஞ்ச நாளைக்கு ஹீரோவாக பயணத்தை தொடலாம் என்று முடிவு எடுத்து விட்டார். அந்த வகையில் இரு தினங்களுக்கு முன் வெளிவந்த மகராஜா படம் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாக வெற்றி பெற்று வருகிறது.
தற்போது அனைத்து திரையரங்குகளிலும் ஓடிக் கொண்டு வருவதை ஒட்டி வசூல் அளவிலும் லாபத்தை பார்த்து வருகிறது. அந்த வகையில் இப்படத்தின் கதை ஆனது பெண்களை சீண்டினால் எந்த மாதிரியான தண்டனை கிடைக்கும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக பெண்பாவம் பொல்லாததுன்னு நிரூபித்துக் காட்டியிருக்கிறார். ஒரு பாசமான அப்பாவாக தத்ரூபமான நடிப்பை வெளிக்காட்டி இருக்கிறார்.
இதே மாதிரி இதுவரை இவர் வித்தியாசமாக நடித்து வெற்றி கண்ட படங்களும் எக்கச்சக்கமாக இருக்கிறது. அதிலும் வில்லனாக நடித்த விக்ரம் வேதா படம் தான் இவருடைய கேரியர்கே ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்றே சொல்லலாம். ஒரு வில்லனையும் ரசிக்கும் படி பார்க்க வைத்தார். அந்த அளவிற்கு ஒரு மாஸ் வில்லனாக வெற்றி பெற்றுவிட்டார்.
அதே மாதிரி என்னால் ரொமான்டிக் ஹீரோவாகவும் காதல் நாயகனாகவும் மாற முடியும் என்பதற்கேற்ப 96 படத்தில் ராம் என்ற கேரக்டரை ரசிக்கும்படியாக கொடுத்து அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்து விட்டார். இதனை அடுத்து விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படத்தில் பவானி என்ற கேரக்டரில் நடித்து விஜய்யை ஓரங்கட்டும் அளவிற்கு வில்லனாக மாஸ் காட்டிவிட்டார்.
அத்துடன் பாலிவுட்டிலும் முதல் முறையாக காலடி எடுத்து வைத்து ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்து வெற்றி நடை போட்ட ஜவான் படத்திலும் ஆயிரம் கோடி வசூலை பார்த்து இவருக்கான முத்திரையை அங்கேயும் பதித்து விட்டார். இப்படி இவர் நடிக்கும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றிலும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பெரும் அளவிற்கு தத்ரூபமான நடிப்பை கொடுத்து வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் ஏற்கனவே வெளிவந்த விடுதலை முதல் பாகத்தில் விஜய் சேதுபதி ஒரு வில்லனாகவும் ஹீரோவாகவும் ஜெயித்துவிட்டார். இதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் பெருமாள் என்ற வாத்தியார் கேரக்டரை முன்னிறுத்தும் விதமாக மொத்த கதையின் நாயகனாகவும் கூடிய விரைவில் ஜொலிக்கப் போகிறார்.