விடுதலை முடித்த கையோடு விஜய் சேதுபதியின் செயல்.. மீண்டும் சரியா போகும் மார்க்கெட்

விஜய் சேதுபதியின் மார்க்கெட் இப்போது கொஞ்சம் டல்லாக தான் போய்க் கொண்டிருக்கிறது. வரிசையாக அவர் நடித்த படங்கள் தொடர்ந்து பிளாப் ஆகி வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் சமீபத்தில் வெளியான டிஎஸ்பி படங்கள் பெரிய அளவில் மக்களை ஈர்க்கவில்லை.

இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து உள்ளார். இந்தப் படம் வருகின்ற மார்ச் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்போது விடுதலை படத்தை முடித்த கையோடு மீண்டும் பிஸியாக விஜய் சேதுபதி நடித்து வருகிறாராம்.

Also Read : அடி மேல் அடிவாங்கும் விஷால், விஜய் சேதுபதி.. கழட்டி விட தயாரான தயாரிப்பாளர்கள்

அதாவது மனுஷன் திரும்பவும் கையில் ஒரு டஜன் படங்களை வைத்துள்ளார். ஏற்கனவே விஜய் சேதுபதியின் படங்களின் தோல்விக்கு காரணம் அடிக்கடி அவரது படங்கள் வெளியாவதால் ஒரே முகத்தை பார்த்தால் மக்களுக்கு போர் அடித்து விடுகிறது. ஆகையால் தான் இவருடைய படங்கள் பிளாப் ஆகிறது என கூறப்பட்டது.

இதனால் சில காலங்கள் படங்களில் நடிக்காமல் இருந்த விஜய் சேதுபதி மீண்டும் பழையபடி அதிக படங்களை புக் செய்து வைத்துள்ளாராம். அதுமட்டுமின்றி பாலிவுட்டிலே மெர்ரி கிறிஸ்துமஸ், ஜவான் என நாலைந்து படங்கள் லயன் அப்பில் உள்ளதாம். தமிழிலும் பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

Also Read : விஜய் சேதுபதியை ஓரங்கட்டும் தயாரிப்பாளர்கள்.. அடுத்தடுத்த தோல்விகளால் ஆட்டம் கண்ட மார்க்கெட்

மேலும் கமல் தயாரிப்பில் உதயநிதி நடிப்பதாக இருந்த படம் டிராப்பானது. அந்த படத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க ராஜ்கமல் நிறுவனம் யோசித்துள்ளனராம். சென்ற வருடம் போலவே இந்த வருடம் விஜய் சேதுபதிக்கு வாரத்திற்கு ஒரு படம் என்ற அளவுக்கு எக்கச்சக்க படங்களில் நடித்து வருகிறார்.

ஆகையால் மீண்டும் அவர் முகத்தையே தொடர்ந்து ரசிகர்கள் பார்த்தால் விஜய் சேதுபதியின் மார்க்கெட் குறைய அதிக வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி கதாநாயகனாக மட்டும் நடிக்காமல் எல்லா கதாபாத்திரங்களையும் விஜய் சேதுபதி ஒத்துக் கொள்வதால் மிகக் குறுகிய காலத்திலேயே சினிமாவை விட்டு போகும் அபாயமும் உள்ளது என பலரும் கூறி வருகிறார்கள்.

Also Read : விஜய் சேதுபதி, விஷால் நம்பி ஏமாற்றமடைந்த கார்த்திக் சுப்புராஜ்.! அதிரடியாக எடுத்த முடிவு