புதன்கிழமை, ஜனவரி 22, 2025

விஜயகாந்த் மரணத்தில் விஜய் சேதுபதி வைத்த கோரிக்கை.. கண்டுக்காத நன்றி கெட்ட நடிகர் சங்கம்

Vijayakanth: கடந்த ஆண்டின் இறுதி மிகப்பெரும் சோகம் நிறைந்ததாக அமைந்துவிட்டது. திரையுலகினர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகமே விஜயகாந்தின் மறைவை நினைத்து இன்னமும் கலங்கி கொண்டிருக்கின்றனர்.

தற்போது விஜயகாந்தை நல்லடக்கம் செய்த இடத்தில் கூட்டம் கூட்டமாக பொதுமக்களும் பிரபலங்களும் வந்து அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் சங்கம் விஜயகாந்தின் இறப்பை பத்தோடு பதினொன்றாக கடந்து சென்றது பெரும் விமர்சனம் ஆகி வருகிறது.

அந்த வகையில் கேப்டனின் மறைவுக்கு ரஜினி, கமல், விஜய், லோகேஷ் கனகராஜ், விஜய் சேதுபதி, அர்ஜுன், விஜய் ஆண்டனி அனைவரும் வந்து இறுதி மரியாதை செலுத்தினார்கள். ஆனால் நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த கார்த்தி, விஷால் உட்பட யாரும் கலந்து கொள்ளவில்லை.

Also read: அரசியலுக்கு வந்த கேப்டனை இழந்த 5 நடிகர்கள்.. பச்சோந்தியாக மாறி சீரழிந்தவர்

இந்நிலையில் விஜய் சேதுபதி உள்ளூரில் இருக்கும் நடிகர்களை எல்லாம் ஒன்று திரட்டி விஜயகாந்தின் இறுதி சடங்கை எடுத்து நடத்துவோம் என்று கூறியிருக்கிறார். ஆனால் நடிகர் சங்கம் அதை கண்டு கொள்ளவில்லையாம்.

ஒருவேளை அவர்கள் அதை செய்திருந்தால் நிச்சயம் அது கேப்டனுக்கான சிறந்த மரியாதையாக இருந்திருக்கும். அந்த அளவுக்கு கேப்டன் நடிகர் சங்கத்திற்காக பல நல்ல விஷயங்களை செய்திருக்கிறார் ஆனால் நடிகர் சங்கத்தினர் அதை பற்றி எல்லாம் யோசிக்காமல் நன்றி கெட்டவர்களாக இருந்தது இப்போது கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.

Also read: கல்லூரி நண்பர்களுடன் கேப்டன் மிரட்டிவிட்ட ஒரே படம்.. 200 நாட்கள் வரை திரையரங்கை அதகளம் செய்த சம்பவம்

Trending News