திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

10 படங்களில் நடித்தும் பிரயோஜனம் இல்ல.. கடைசியாக விஜய் சேதுபதி நண்பருக்கு அடித்த ஜாக்பாட்

Actor Vijay Sethupathi: சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்க தயார் என அலட்டல் இல்லாமல் நடிக்கக்கூடிய நடிகர் தான் விஜய் சேதுபதி. இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கிறார். தான் வளர்ந்தால் மட்டும் போதும் என்று இருந்து விடாமல், விஜய் சேதுபதி எல்லோரையும் வளர்த்து விட ஆசைப்படுவார்.

அப்படி சின்ன சின்ன ஹீரோக்கள் பலரை தூக்கி விட்டிருக்கிறார். இவரும் சின்ன ஹீரோவாய் கஷ்டப்பட்டு தான் சினிமாவில் முன்னேறி வந்தார். அதனால் இவரைப் போலவே சினிமாவில் படிப்படியாக முன்னேறும் இளம் நடிகர்களுடன் இணைந்து நடிக்க தயக்கம் கொள்ள மாட்டார். இவருடன் இணைந்து பல படங்களில் நடித்தவர் அசோக் செல்வன்.

Also Read: கோடிகளை குவித்த அசோக்செல்வனின் 5 படங்கள்.. மூன்றே நாளில் போர் தொழில் செய்த வசூல் சாதனை

கடைசியாக அசோக் செல்வன் நடிப்பில் வெளியான போர் தொழில் படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது.
இந்த படம் அவருக்கு அடித்த ஜாக்பாட் என்றே சொல்லலாம். விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான இந்த படம் வெறும் மூன்றே நாட்களில் 6 கோடி வசூலை வாரி குவித்து இருக்கிறது. இந்த படத்தில் அசோக் செல்வன் உடன் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இதற்கு முன்பு அசோக்செல்வன் 10 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். ஆனால் அந்த படங்கள் அனைத்தும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வெற்றி பெறவில்லை. ஆனால் இப்போது இவர் நடிப்பில் வெளியான போர் தொழில் தான் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. இதன் மூலம் அவருக்கு நிறைய வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் முதல் முதலாக அஜித் நடிப்பில் வெளியான பில்லா 2 படத்தில் இளம் வயது பில்லாவாக நடித்து தனது திரைப் பயணத்தை துவங்கினார்.

Also Read: விஜயகாந்த் போல் சுதாகரிக்க தெரியாமல் இமேஜை கெடுத்த விஜய் சேதுபதி.. தொடர்ந்து தேடி வரும் வாய்ப்பு

அதன் பின் விஜய் சேதுபதியுடன் சூது கவ்வும் படத்தில் அசோக் செல்வன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்திற்கு பிறகு தான் அசோக் செல்வனுக்கு கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்பு தொடர்ந்து வந்தது. பீட்சா 2: வில்லா படத்தில் இவர் கதாநாயகனாக நடித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக தெகிடி படத்தின் மூலம் ரசிகைகளின் ஃபேவரிட் ஹீரோவாகவே மாறினார்.

பின்பு ஓ மை கடவுளே, 144, சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம் போன்ற படங்களில் வரிசையாக நடித்தாலும் எந்த படங்களும் சொல்லிக் கொல்லும் அளவிற்கு ஓடவில்லை. தமிழில் மட்டுமல்லாமல் இவர் தெலுங்கு, மலையாள படங்களிலும் நடிக்க துவங்கினார். இருப்பினும் இவருடைய நடிப்புக்கு தீனி போடும் வகையில் தற்போது போர் தொழில் திரைப்படம் அமைந்திருக்கிறது. இந்த படத்தின் பிறகு அசோக் செல்வனுக்கு ஏறுமுகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: நண்பனை தூக்கி விட களம் இறங்கும் விஜய்சேதுபதி.. பொண்டாட்டியை வைத்து கல்லா கட்ட திட்டம் போடும் இயக்குனர்

Trending News