திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வில்லனுக்கு விஜய் சேதுபதி கொடுத்த வாக்குறுதி.. 17 வருடங்களுக்குப் பின் ஜெயிலரால் கிடைத்த அங்கீகாரம்

Vijay Sethupathi: தற்போது நடிகராகவும், வில்லனாகவும் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டு அனைத்து பக்கங்களும் கொடிகட்டி பறக்கிறவர் தான் விஜய் சேதுபதி. இவர் ஆரம்பத்தில் சினிமாவிற்குள் கஷ்டப்பட்டு நுழைந்து இருந்தாலும் அடிமட்டத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தான் இந்த இடத்திற்கு உயர்ந்து வந்திருக்கிறார். அப்படிப்பட்ட இவர், சினிமாவில் திறமையானவர்களை பார்த்து விட்டால் அவர்களுக்கு ஏதாவது ஒரு கதாபாத்திரத்தை கொடுத்து விடுவார்.

அந்த வகையில் தற்போது ஒரு வில்லனின் நடிப்பை பார்த்து வியந்து போய் இருக்கிறார். அதாவது அவர் நடிக்க வந்த புதிதில் வில்லனுக்கு அடியாட்களாக தான் கேரியரை ஆரம்பித்தார். அதன் பின் போகப்போக நடிப்பின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு இவருடைய முழு அர்ப்பணிப்பையும் அதில் கொடுத்தார்.

Also read: வாய்ப்புகளை நிராகரிக்கும் விஜய் சேதுபதி.. வில்லன் கதாபாத்திரம் ஏற்க மறுக்கும் சூட்சமம்

அந்த வகையில் தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். ஆனால் இவருக்கான அங்கீகாரம் சரியாக கிடைக்காததால் இவருடைய பூர்வீகமான அக்கட தேசத்திற்கு திரும்பிப் போய்விட்டார். அப்படிப்பட்ட இவர் 17 ஆண்டுகளுக்குப் பின் தற்போது இவருடைய திறமை அத்தனையும் வெளிக்காட்டி ஜெயிலர் படத்தில் நடித்து இவருக்கான அங்கீகாரத்தை பெற்றுக் கொண்டார்.

அந்த நடிகர் வேறு யாருமில்லை விஷால் நடிப்பில் வெளிவந்த திமிரு படத்தில் லொடுக்காக அறிமுகமான நடிகர் விநாயகம். இதனைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளியான காளை மற்றும் மரியான் போன்ற படங்களில் நடித்தார். அதன் பின் தற்போது தான் ஜெயிலர் படத்தில் வர்மன் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடிப்பை காட்டி அனைவரையும் மிரட்டி இருக்கிறார்.

Also read: விஜய் சேதுபதி வைத்தெல்லாம் என்னால் படம் பண்ண முடியாது.. கொந்தளித்த இயக்குனர்

அப்படிப்பட்ட இவருடைய நடிப்பை பார்த்த விஜய் சேதுபதிக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. அத்துடன் இவரை பாராட்டியே ஆக வேண்டும் என்று போன் மூலம் விஜய் சேதுபதி பாராட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார். அத்துடன் அடுத்த படத்தில் நாம் இருவரும் சேர்ந்து நடிக்கலாம் என்று வாக்குறுதியும் கொடுத்திருக்கிறார்.

திறமை இருந்தால் வெற்றி நிச்சயம் என்று சாதித்தவர்கள் பலரையும் பார்த்திருப்போம். அது தற்போது விநாயகம் விஷயத்தில் ஊர்ஜிதம் ஆகிவிட்டது. காலம் கடந்தாலும் இவருடைய திறமைக்கான அங்கீகாரம் கிடைத்துவிட்டது. இதனால் தொடர்ந்து இன்னும் பல படங்களில் நடிப்பதற்கு இவரை தேடி வாய்ப்புகள் வரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Also read: முத்தையா போனதால் முதல்வரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கும் விஜய் சேதுபதி.. உறுதியான வித்தியாசமான டைட்டில்

Trending News