செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

விஜய் சேதுபதி-மிஷ்கின் கூட்டணியில் ஏற்பட்ட பிளவு.. கடுப்பில் இயக்குனர் செய்த சம்பவம்

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. கடந்த வருடம் வெளியான டீசரை தொடர்ந்து இப்படம் எப்போது வெளியாகும் என அனைவரும் காத்து கிடக்கின்றனர். ஆனால் இன்னும் இந்த படத்தின் ரிலீஸ் பற்றிய எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை.

ஆண்ட்ரியா, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியும் ஒரு கௌரவத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். அதிலிருந்தே இவருக்கும் மிஷ்கினுக்கும் இடையே ஒரு நல்ல நட்பு உருவானது. அதை தொடர்ந்து பல பேட்டிகளில் அவர் விஜய் சேதுபதி குறித்து பெருமையாக பேசி இருந்தார்.

Also read: அந்த கேடுகெட்ட பழக்கத்திற்கு அடிமையான 6 நடிகைகள்.. ரஜினி மிஞ்சிய ஆண்ட்ரியா, அமலா பால்

அதனாலேயே இவர்கள் இருவரும் அடுத்ததாக ஒரு திரைப்படத்தில் இணைய முடிவு செய்திருந்தனர். அது குறித்த தகவல்கள் கூட வெளியாகி பரபரப்பை கிளப்பி இருந்தது. ஆனால் இப்போது இவர்களின் நட்பில் பிளவு ஏற்பட்டு விட்டதாம். அதன் காரணமாக மிஷ்கின், விஜய் சேதுபதியை வைத்து படம் எடுக்கும் முடிவை கைவிட்டு இருக்கிறார்.

இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் பாலிவுட் பக்கம் சென்ற விஜய் சேதுபதி இப்போது தமிழை ஓரங்கட்டி வருகிறார் என்பதுதான் முக்கிய காரணமாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் அதிகபட்ச சம்பளம் கொடுப்பதாலேயே அவர் அடுத்தடுத்த ஹிந்தி படங்களை ஓகே செய்து வருகிறாராம்.

Also read: விஜய்க்கு தம்பியாக நடிக்க இருந்த வாய்ப்பை நழுவ விட்ட குட்டி பார்த்திபன்.. அதனாலயே காணாமல் போன பரிதாபம்

அந்த வகையில் அடுத்த ஐந்து வருடங்களுக்கு அவர் வேறு படத்தில் நடிக்க முடியாத அளவுக்கு கை நிறைய வாய்ப்புகளை வைத்திருக்கிறாராம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் அவர் மிஷ்கின் இயக்கத்தில் நடிக்காமல் அவரை டீலில் விட்டிருக்கிறார். ஏற்கனவே கோபக்காரரான இயக்குனர் தற்போது அதிரடியான ஒரு சம்பவத்தை செய்திருக்கிறார்.

அதாவது இவர்களின் கூட்டணியில் உருவாகும் படத்தை கலைப்புலி தாணு தான் தயாரிக்க இருந்தார். தற்போது இந்த படம் நிறுத்தப்பட்டாலும் அதே பேனருக்காக மிஷ்கின் ஒரு வெப் தொடரை இயக்க இருக்கிறாராம். அது மட்டுமல்லாமல் விஜய் சேதுபதிக்கு சொன்ன கதையை முன்னணி ஹீரோ ஒருவரை வைத்து எடுக்கவும் அவர் திட்டமிட்டு இருக்கிறாராம். இந்த விவகாரம் தான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Also read: திரையில் காட்டாத 18+ விஷயங்களை ஓடிடியில் பார்க்கலாம்.. வெற்றிமாறனின் அதிரடி முடிவு

Trending News