சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

வெற்றிமாறன், சூரி படத்தில் நடிக்க விஜய் சேதுபதி கேட்ட சம்பளம்.. மயக்கம் போட்டு விழுந்த தயாரிப்பாளர்

தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் வெற்றிமாறன் நடிகர்களுக்காக கதை எழுதாமல் கதைக்கான நடிகர்களை தேர்வு செய்து படம் இயக்கி வருகிறார் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.

முன்னதாக தனுஷை வைத்து தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார் அட்டகத்தி தினேசுக்கு பொருந்தும் விசாரணை என்ற கதையை தேர்ந்தெடுத்து சூப்பர் ஹிட் படமாக எடுத்தார். அதே போல் தான் தற்போது காமெடி நடிகர் சூரியை வைத்து அவருக்கு தகுந்த ஒரு கதையை தேர்வு செய்து அவரை கதாநாயகனாக வைத்து படம் இயக்கி வருகிறார் வெற்றிமாறன்.

இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. சத்தியமங்கலத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது. முன்னதாக பாரதிராஜா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த நிலையில், திடீரென அந்த படத்தில் இருந்து விலகினார்.

அதில் சூரிக்கு அப்பா கதாபாத்திரமாம். தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். ஆனால் விஜய் சேதுபதி பழகியவர்கள், நண்பர்கள் என்று பார்க்காமல் சம்பள விஷயத்தில் உஷாராக இருக்கிறார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

வெற்றிமாறன் மற்றும் சூரி கூட்டணியில் உருவாகும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கிட்டத்தட்ட ஏழு கோடி ரூபாய் சம்பளம் பேசியுள்ளார். இதைக் கேட்ட தயாரிப்பாளருக்கு மயக்கமே போடும் நிலைமை ஏற்பட்டு விட்டதாம்.

vijaysethupathi-cinemapettai
vijaysethupathi-cinemapettai

என்னதான் நட்பாக இருந்தாலும் சம்பளத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விஜய் சேதுபதி என அவரைப் பிடிக்காதவர்கள் கிளப்பி விட்டுள்ளனர். ஆனால் உண்மையில் சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு வந்த நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

Trending News