சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் மற்றும் பலர் நடிப்பில் நேற்று மாமனிதன் திரைப்படம் வெளியானது. பல ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் பல பிரச்சனைகளை தாண்டி தற்போது தான் ஒரு வழியாக ரிலீஸ் ஆகியிருக்கிறது.
குடும்பங்களை கவரும் வகையில் திரைப்படங்களை எடுத்து அசத்தும் சீனு ராமசாமி இந்தத் திரைப்படத்தையும் அதே பாணியில் தான் இயக்கியிருக்கிறார். அந்த வகையில் இவருக்கு நல்ல திரைப்படம் என்று பாராட்டுகள் குவிந்தாலும், ஒரு சில நெகட்டிவ் விமர்சனங்களும் கதையை பற்றி வந்து கொண்டிருக்கிறது.
அதாவது இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு வழக்கம்போல பட்டையைக் கிளப்பி இருக்கிறது. ஆனாலும் சமீபகாலமாக அவர் திரைப்படங்களை தேர்ந்தெடுப்பதில் சொதப்பி வருவதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
ஏனென்றால் இந்த மாமனிதன் திரைப்படத்தை பார்க்கும் போது 10 ஆண்டுகளுக்கு முன்பு வரவேண்டிய கதை போல் தெரிவதாக பலரும் குறிப்பிடுகின்றனர். தற்போது தமிழ் சினிமா வேற லெவலில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆனால் இன்னும் பழைய பாணியில் இதுபோன்று படங்கள் வருவது ரசிகர்களுக்கு ஒரு வித சலிப்பை ஏற்படுத்துகிறது.
அந்த வகையில் மாமனிதன் திரைப்படம் சில இடங்களில் சீரியல் போன்று இழுவையாக இருப்பதாக கூறுகின்றனர். மேலும் விஜய் சேதுபதிக்காக இந்த திரைப்படத்தை காணும் ஆர்வத்துடன் வந்த ரசிகர்கள் தற்போது படம் மொக்கை என்று விமர்சனம் செய்கின்றனர்.
ஏனென்றால் சமீபத்தில் விஜய் சேதுபதி விக்ரம் திரைப்படத்தில் கொடூர வில்லனாக நடித்தது மிரட்டியிருந்தார். இதனால் அவருடைய இந்த மாமனிதன் திரைப்படத்திற்கும் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது ஆனால் தற்போது படத்தை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வில்லன் ரோல் தான் செட் ஆகும். ஹீரோவாக இனி ஜெயிக்க மாட்டார் என்று கூறி வருகின்றனர். இதன் பிறகாவது விஜய் சேதுபதி கதையை தேர்ந்தெடுப்பதில் சற்று கூடுதல் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்ப்போம்.