ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2024

விக்ரம் படத்தில் நடிக்க விஜய்சேதுபதிக்கு பேசிய சம்பளம்.. மாஸ்டரை விட ரொம்ப கம்மியா இருக்கே.!

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் புதிய படம் ‘விக்ரம்’. இதில் கமல்ஹாசன் நாயகனாக நடிக்கிறார். அவருடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில், நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

நீண்ட நெடிய வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் கமலஹாசனின் படத்திற்கு பழையபடி மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கமல், லோகேஷ் கனகராஜ் இணையும் விக்ரம் படத்திற்கு கமல் ரசிகர்கள் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமாவே வெயிட்டிங்.

ராஜ் கமல் பிலிம்ஸ் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார் கமல். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 20 வயதேயான பிக்பாஸ் புகழ் ஷிவானி நடிக்க உள்ளதாக சமீபத்தில் செய்தி வெளியானது.

ஷிவானியை தொடர்ந்து விஜய் டிவியில் பிரபலமான மைனா நந்தினியும் இன்னொரு சீரியல் நடிகை ஒருவரும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. விஜய் சேதுபதி நடிக்கும் மற்றொரு படமான ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் அவருக்கு சமந்தா, நயன்தாரா என இரண்டு ஜோடிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் படத்தில் நடிப்பதற்காக விஜய் சேதுபதிக்கு 3 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் விஜய் சேதுபதிக்கான ஜோடி மற்றும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கமல் மற்றும் பகத் பாசிலுக்கு ஜோடியாக யார் நடிக்கிறார்கள் என்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.

vijaysethupathi-cinemapettai
vijaysethupathi-cinemapettai

விக்ரம் படத்தை முடித்தபின் சூர்யா நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மாஸ்டர் படத்தில் 10 கோடி சம்பளம் வாங்கிய விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் தளபதி விஜய்க்கு நிகராக பேசப்பட்டது.

ஆனால் இங்கு தயாரிப்பாளர் கமல் என்பதால் எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு போக வேண்டியது தான் நிலைமை. கதை, கதாபாத்திரம், தயாரிப்பாளர் மூன்றையும் பொருத்து இந்த சம்பளம் தீர்மானிக்கப்பட்ட இருக்கலாம் என்கிறது கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -spot_img

Trending News