தனது எதார்த்தமான நடிப்பு மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. மாறுபட்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதால் விஜய் சேதுபதிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
விஜய்சேதுபதியின் திறமையான நடிப்பு காரணமாக பல முன்னணி இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தங்களது படங்களில் ஒப்பந்தம் செய்ய போட்டி போட்டு முன்வருகின்றனர். அந்தவகையில் தற்போது கைவசம் 20க்கும் மேற்பட்ட படங்களில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். அவற்றில் சில படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன.
அந்த வரிசையில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார் படம் விநாயகர் சதுர்த்தியன்று நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாக உள்ளது. ஏற்கனவே அதிக படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி மேலும் மேலும் புதிய படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.
இந்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் மாஸ்டர் செஃப் என்ற சமையல் நிகழ்ச்சியையும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். விஜய் சேதுபதி ஹீரோவாக மட்டும் நடிக்காமல் வில்லன், குணசித்ர வேடம் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் கதை பிடித்திருந்தால் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க வேண்டும் என்றால் 10 கோடி சம்பளம் என்றும் ஹீரோவாக நடிக்க 15 கோடி சம்பளமும் கேட்டு வருகிறாராம். வில்லனாக நடிக்க வேண்டும் என்றால் குறைந்த நாட்களே தேவைப்படும் என்பதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.