ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஹீரோவாக களமிறங்கும் விஜய் சேதுபதியின் வாரிசு.. பூஜையுடன் மிரட்டும் டைட்டில் போஸ்டர்

Vijay Sethupathy: வாரிசு நடிகர்கள் சினிமாவில் களம் இறங்குவது ஒன்றும் புதிது கிடையாது. பிரபு, கார்த்திக், விஜய், சிம்பு என ஏகப்பட்ட முன்னணி பிரபலங்கள் அப்பாவை வைத்து சினிமாவுக்குள் வந்தவர்கள். அப்படித்தான் விக்ரமின் மகன் துருவ் விக்ரமும் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார்.

ஆனால் ஒரு தரமான வெற்றியை கொடுக்க அவர் இன்னமும் போராடிக் கொண்டுதான் இருக்கிறார். இந்த சூழலில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் ஹீரோ அவதாரம் எடுத்திருக்கிறார். அந்தப் படத்திற்கான பூஜை இன்று சென்னையில் நடைபெற்று உள்ளது.

surya-phoneix
surya-phoneix

அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்களும், வீடியோக்களும் இப்போது வைரலாகி வருகிறது. அது மட்டுமல்லாமல் டைட்டில் போஸ்டரும் வேற லெவலில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் பீனிக்ஸ் வீழான் என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்குகிறார்.

surya-vijay sethupathy
surya-vijay sethupathy

Also read: அந்தரங்க டார்ச்சரில் நடிகையை கதறவிட்ட விஜய் சேதுபதி பட இயக்குனர்.. வாக்குமூலத்துடன் பிஸ்மி வெளியிட்ட சீக்ரெட்

சாம் சி எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இன்று பூஜையுடன் சூட்டிங் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் போஸ்டரில் சூர்யா ஜவான் ஷாருக்கான் போன்ற தோற்றத்தில் இருக்கிறார். அதாவது சாக்கு துணியை கொண்டு முகம் முழுவதும் மறைத்தபடி ஒரு கண் மட்டும் தெரியும் படி அந்த போஸ்டர் உள்ளது.

phoneix-surya
phoneix-surya

அதில் ரத்தக்கறையும் இருப்பதால் இப்படம் ஆக்சன் நிறைந்த கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியாக முதல் படத்திலேயே பெரும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறார் விஜய் சேதுபதியின் வாரிசு. ஆனால் இதை வைத்தே சில நெட்டிசன்கள் நெப்போட்டிசம் பிரச்சனையை தொடங்கி வைத்துள்ளனர்.

Also read: மார்க்கெட்டை சுத்தமா தொடச்சி தூர போட போகும் சைக்கோ இயக்குனர்.. பீதியில் இருக்கும் விஜய் சேதுபதி

Trending News