புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சண்டை கோழியாய் சீற தயாராகும் போட்டியாளர்கள்.. தாக்குப் பிடிப்பாரா விஜய் சேதுபதி.? வரப்போகுது பிக்பாஸ் 8

Biggboss 8: விஜய் டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் டிஆர்பியை எகிற வைக்கும் ஷோ தான் பிக்பாஸ். கமல் கடந்த ஏழு வருடங்களாக தொகுத்து வந்த இந்த நிகழ்ச்சி இந்த வருடம் விஜய் சேதுபதி கைக்கு சென்றுள்ளது.

தொடர்ச்சியான சினிமா மற்றும் அரசியல் பணி காரணமாக கமல் இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகி இருக்கிறார். அதை தொடர்ந்து பல நடிகர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில் விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பது உறுதியாகி உள்ளது.

இதன் ப்ரோமோ சூட்டிங் கடந்த வாரம் பாண்டிச்சேரியில் நடந்து முடிந்துள்ளது. இந்த வார இறுதியில் அது அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது. மேலும் அக்டோபர் முதல் வாரத்தில் நிகழ்ச்சியும் தொடங்கப்பட இருக்கிறது.

ஏற்கனவே போட்டியாளர்களை முடிவு செய்துள்ள பிக் பாஸ் டீம் இறுதி கட்ட வேலைகளில் இப்போது பிஸியாக இருக்கிறது. அதன்படி தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சைக்குரிய பிரபலங்களாக இருப்பவர்கள் தான் இந்த வருடம் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல இருக்கின்றனர்.

பஞ்சாயத்துக்கு தயாராகும் விஜய் சேதுபதி

அந்த வரிசையில் TTF வாசன், பாரதி கண்ணம்மா அருண், குக் வித் கோமாளி புகழ் ஷாலின் ஜோயா, ரியாஸ்கான், ரஞ்சித், விஜய் டிவி தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் ஆகியோர் இந்த பட்டியலில் இருக்கின்றனர். இது தவிர பிக் பாஸ் அந்நிகழ்ச்சியை ரிவ்யூ செய்த தயாரிப்பாளர் ரவீந்திரனும் இந்த வருடம் போட்டியாளராக நுழைய உள்ளார்.

இவர்களை தவிர இன்னும் சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. சென்ற சீசனில் முக்கிய நபர்களை வைல்ட் கார்ட் என்ட்ரியாக இறக்கியது போல் இந்த வருடமும் எதிர்பார்க்கலாம். இப்படியாக சண்டைக்கோழிகளாக தேடித்தேடி பிடித்திருக்கிறது விஜய் டிவி.

இவர்களின் அலப்பறையை விஜய் சேதுபதி எப்படி சமாளிக்க போகிறார்? பஞ்சாயத்து சூடு பிடிக்குமா? என்ற ஆர்வம் எப்போது ஆடியன்ஸ்க்கு வந்துவிட்டது. எதார்த்த மனிதராக இருக்கும் அவர் நிச்சயம் இந்த நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு செல்வார் என்பதில் சந்தேகம் இல்லை. எதிர்பாராததை எதிர்பார்க்கலாம்.

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய போகும் சண்டைக்கோழிகள்

Trending News